கர்த்தரின் தூதனானவர் The Angel of The Lord 51-07-18 1. மிக்க நன்றி. மாலை வணக்கம் நண்பனே. அந்த சாட்சியை கேட்டு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். எப்போதுமே நம் கர்த்தர் அவருடைய பிள்ளைகளுக்கு ஏதாவது செய்யும்போது அவ்வாறு உள்ளது! நீங்கள் யாராக இருந்தாலும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. மற்றும் நீங்கள் என் முன்னால் நின்றாலும் நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது என்று நான் யூகிக்கிறேன். ஏனென்றால் இதற்கு முன்பு நான் உங்களை காணும்படியான வாய்ப்பு இல்லாததினால்... நல்லது! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மேலும் சகோதரியே அது எந்த கூட்டத்தில் நடந்தது? (சகோதரர் பிரான்ஹாமிடத்தில் சகோதரி பேசுகிறார்கள்) வின்ட்சர்... நீங்கள் கனடா தேசத்தவரா? ஓ, நீங்கள் கிளீவ்லன்டில் இருந்து வந்திருக்கிறீர்களா? ஆம் அம்மா! நீங்கள் சுகமடைந்ததினால் நான் சந்தோஷப்படுகிறேன். இந்த இரவு கூட்டத்தில் இருக்கும் எல்லோரும் உங்களைப் போல் கொஞ்ச நேரத்தில் அவர்களும் சுகத்தைப் பெற்றுக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே! 2. உங்களிடத்தில் நான் பேசியபோது; அல்லது ஏதோவொன்று நடந்தபோது; நான் சொன்னது உண்மை என்று விசுவாசித்தீர்கள். நான் சொன்னபடியாகவே அது நடந்ததா? நான் சொன்னபடியாகவே இருந்ததா? அது உண்மையென்றால் மற்றவர்கள் பார்க்கும்படியாக உங்கள் கரத்தை உயர்த்துங்கள். புரிந்ததா? கர்த்தர் சொன்னதை, நான் உங்களுக்கு சொன்னபோது அதை நீங்கள் சந்தேகித்திருந்தால் என்னவாக நடந்திருக்கும்? ஆம் அம்மா, உங்கள் மருத்துவர் சொன்னது போல் நீங்கள் மரித்திருப்பீர்கள். ஒன்று இதுவோ அல்லது எதுவோ, எதையாவது ஒன்றை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். மேலும் தேவன் எதையும் தவறாக சொல்லமாட்டார், அவர் எப்போதும் உண்மையையே சொல்லுவார். நல்லது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே! மற்றும் இந்த ஜீவியத்தில் உங்களை இனி சந்திக்கவில்லையென்றால் தேவனின் கிருபையால் அந்த பக்கத்தில் உங்களை நிச்சயம் சந்திப்பேன்! ஆமென். அக்கரையில் என் எல்லா நண்பர்களோடும் நான் இருக்க விரும்புகிறேன்; மற்றும் அவர்களோடு உரையாட விரும்பு கிறேன். ஏனெனில் அங்கு உரையாடுவதற்கு அதிக நேரம் இருக்கும். 3. இப்பொழுது இந்த இரவுப்பொழுதில் மிகவும் வெப்பமாக உள்ளது. சகோதரர் பேக்ஸ்டெர்... நேற்று மாலையில் மிகவும் வெப்பமாக இருந்தது. நாங்கள்... ஆராதனை முடிந்த பின்பு, நான் வீட்டிற்கு சென்றபிறகு, எனது கோட் வியர்வையினால் என் உடலில் ஒட்டியிருந்தபடியினால், அது எனக்கு ஒரு விதமான பாதிப்பை உண்டாக்கியது. பிறகு என் உடல்நிலை சில மணிநேரத்திற்கு பின்பு சரியாக இல்லை. நான் மிகவும் பெலவீனமடைந்தேன். ஆனால் இன்னும் இரண்டு கூட்டங்கள் உள்ளன. ஒரு சிறிய ஓய்வுக்கு முன்பு, நான் வெளிநாட்டிற்குச் செல்லப் போகிறேன். அதன் பிறகு நியூயார்க் பட்டணத்தில் உள்ள ஒரு பெரிய குத்துசண்டை மைதானத்தில்; அங்கு தான் பெரிய பெரிய குத்து சண்டைகள் நடக்கும்; அங்கு தான் இரண்டு அல்லது மூன்று இரவு கூட்டங்கள் எனக்கு உள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு ரொடேஷியா கூட்டத்திற்கு செல்வதற்கு முன் இரண்டு அல்லது மூன்று இரவு கூட்டத்தில் அந்த அரங்கத்தில் நாங்கள் இருக்க வேண்டும். 4. அருமையான கர்த்தரின் சித்தமிருக்குமானால்; இந்த கிறிஸ்துமஸ் சமயத்தில் எருசலேமில் இருக்கலாம் என்று எண்ணுகிறோம். நீங்கள் லுக் பத்திரிகையில் பார்த்த வண்ணமாக, அந்த யூதர்களில் அநேகர் அங்கு வருவதாக கூறியுள்ளார்கள். அவர்கள் சொன்னார்கள், "இந்த இயேசுவே அந்த கிறிஸ்துவாக இருந்தால்"... என்று அவர்கள் சொன்னார்கள். அதை குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. புரிந்ததா? அதில் இரண்டாயிரம் வருடங்களாக அவர்கள் அங்கே தான் இருக்கிறார்கள். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் செய்தது போல் இன்னுமாக நிலத்தை மர கலப்பையை வைத்து உழவு செய்கிறார்கள். அநேகர் அந்தப் பொருளை நீங்கள் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். மேலும் நார்வே சபையும் மற்றும் ஸ்வீடிஷ் சபையும் பத்து லட்சம் வேதாகமத்தை அனுப்பினார்கள். புதிய ஏற்பாடு உள்ள வேதாகமத்தை, மற்றும் அந்த யூதர்கள் புதிய ஏற்பாட்டை படித்து சொன்னார்கள், "இந்த இயேசு, தீர்க்கதரிசியின் ஓர் அடையாளம் செய்வதை நாங்கள் பார்க்கட்டும். அப்போது அவரை நாங்கள் மேசியாவாக ஏற்றுக் கொள்வோம்",ஓ, அவர்களில் ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பும்படியாக, தேவன் என்னை அங்கு அனுப்பி ஏதாவது செய்வார் என்று நான் நம்புகிறேன். அவர் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். மற்றும் அக்டோபர் மாதத்தில் நான் அங்கு செல்லும் நேரமாக இருக்கிறது. அதை நீங்கள் அறியும்போது எனக்காக நீங்கள் ஜெபியுங்கள்! ஜோஹன்னேஸ்பர்க்கில் அக்டோபர் நாலாம் தேதி அன்று நாங்கள் துவங்கப் போகிறோம். 5. இப்பொழுது இந்த அரங்கம் மிகவும் வெப்பமாக இருக்கிறது. ஏனென்றால் அது இந்த வருடத்தின் பருவ நேரமாக உள்ளது. மற்றும் இந்த இடம் மட்டும் தான் நமக்கு கிடைத்தது. அது கிடைத்ததற்காக சந்தோஷப்படுகிறோம். இதை பெற்றுக் கொண்டதற்காக நான் மட்டும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இல்லையென்றால் இந்த பட்டினத்திற்கு நாங்கள் வந்திருக்க முடியாது. ஆனாலும் இங்குள்ள எல்லோருக்கும் இது ஒரு பெருத்த ஆசீர்வாதமாக நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். மேலும் அநேக பாவிகள் இரட்சிக்கப்பட்டு, மற்றும் கிறிஸ்தவர்கள் நம்முடைய கர்த்தரோடு நெருங்கி ஜீவிப்பது என்னுடைய வாஞ்சையாக இருக்கிறது. எல்லா வியாதியஸ்தர்கள் சுகமடைவதும்; மற்றும் எல்லா முடவர்கள் சுகமாவதுமே என்னுடைய ஜெபமாக இருக்கிறது. கட்டிடத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் அல்லது... அது ஒரு மிகப் பெரிய கூடாரமாக இருந்தது. இந்த இரவில் இங்கு இருப்பவர்களை விட அதிகமான மக்களை அது கொண்டிருந்தது. நான் மேடைக்கு சென்ற உடனே பரிசுத்த ஆவியின் அலை அந்த கூடாரம் முழுவதும் அசைந்தது. அதன் பிறகு அங்கு ஒரு முடவரோ அல்லது வியாதியில் உள்ள ஒரு நபரும் கூட அந்த கட்டிடத்தில் இல்லை. எல்லோரும் சுகமடைந்தார்கள். சக்கர நாற்காலிகள் குவியலாக போடப் பட்டிருந்தது. மிகவும் பெரிய குவியலாக போடப்பட்டிருந்தது. அதை ஒன்றன் மேல் ஒன்றாக தூக்கி போடப்பட்டதினால் பெரிய குவியலாக மாறியது. இப்படிப்பட்ட காரியத்தை நான் என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். 6. அடுத்த நாள் காலை அந்த பட்டணத்தின் ஊடாக, அந்த ஒரு பெரிய கால்நடைகளை ஏற்றும் வண்டியில் அவை எல்லாம் போடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. மற்றும் அந்த சக்கர நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்களும், படுக்கையில் படுத்திருந்தவர்களும், மற்றும் அந்த பொருளை உபயோகப் படுத்தியவர்களும், அந்த வண்டியின் அருகில் போலீஸ் பாதுகாப்புடன், "நம்பிடுவாய்" என்ற பாடலைப் பாடிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த விடுதியின் ஜன்னல் அண்டையில் நின்று அந்த காட்சியைப் பார்த்து, ஒரு சிறு பிள்ளையைப் போல் அழுதேன்.என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் நினைத்தேன், என்னுடைய இருதயம்... ஓ, இயேசு நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்... அங்கு அது தான் நடந்தது. மேலும் அதே காரியம் டோலிடோவிலும் (Toledo) நடக்கலாம். நமக்குள் ஒரு சிறிய விசுவாசம் இல்லாதிருப்பது தான் ஒரு குறைவான காரியம். வெறுமனே நம்புங்கள். நீங்கள் கேட்பதை அப்படியே நம்புங்கள். இப்போது முடிந்தவரை எனக்கு தெரிந்ததை நான் பேச முயற்சிக்கிறேன். எனக்கு தெரிந்த வரையிலும் இயேசு கிறிஸ்துவை எப்படியெல்லாம் மகிமைப்படுத்துவது, அவர் நம் எல்லோரையும் மீட்டார். வீழ்ச்சியில் உள்ள எல்லா காரியத்திலிருந்தும் மீட்டார். மீண்டும் தேவனிடத்தில் சேர்க்கும்படி மனுக்குலத்தை மீட்பதற்காக நம்முடைய இனத்தான் மீட்பராக வந்தார். மேலும் நம்முடைய இரட்சிப்பின் அச்சாரத்தை நாம் பெற்றிருக்கிறோம், இப்போது நாம் கொண்டிருக்கும் இந்த மகிமையான பரிசுத்த ஆவியின் அச்சாரம் தான், நாம் பாவத்திற்கு மேலாக எடுத்துக்கொள்ளப் படுதலில் ஜீவிப்பதற்கு உதவியாக இருக்கிறது. 7. மற்றும் இப்போது நமக்கு தெய்வீக அன்பு இல்லையென்றால் நம்முடைய சரீர உயிர்த்தெழுதல் கிடையாது. நம்முடைய மீட்கப்பட்ட சரீரத்திற்கு தெய்வீக சுகம் தான் அச்சாரமாக உள்ளது. அதைக் குறித்து நீங்கள் யோசித்தது உண்டா? தெய்வீக சுகம் இல்லையென்றால், நீங்கள் கல்லறைக்கு செல்லும்போது, அதன் பிறகு வேறு ஒன்றுமே கிடையாது. அதன் பிறகு என்றென்றுமாக அங்கே கல்லரையில் இருந்து தூசியாக மாறி காணாமல் போவீர்கள், மற்றும் உங்களைக் குறித்து அங்கு ஒன்றுமே இருக்காது. புரிந்ததா? நாம் முன்பு ஏதேன் தோட்டத்தில், இருந்த வண்ணமாக இருப்பதற்காக, இப்போது நாம், நம்முடைய இரட்சிப்பிற்கும், மற்றும் முழுமைக்குமான அச்சாரத்தை பெற்றிருக்கிறோம். புற்று நோயால் பாதிக்கப்பட்டு மற்றும் இன்னும் சில நாட்கள் தான் இருப்பார்கள் என்று மருத்துவர் சொல்லிய இங்கு உள்ள ஒரு ஸ்திரீயை தேவனின் வல்லமை தொடும் என்று நினைக்கிறேன். ஆயிரக் கணக்கில் சுகமடைந்த பட்டியலில் அவளும் ஒன்று. அது ஒரு மனிதனின் சாட்சி அல்ல. அது ஒரு மருத்துவரின் சாட்சி. ஆயிரக்கணக்கான சாட்சியில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. மற்றும் புற்று நோய் இந்த ஸ்திரீயின் சரீரத்தை தின்று போட்டதினால் இன்னும் சில மணிநேரமே ஜீவிப்பார்கள், ஆனாலும், இப்போது அவள் இருக்கிற நிலையில் அச்சாரம் மூலமாக மீட்கப்பட்ட அவளுடைய சரீரத்தை, உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் முழுமையான மதிப்பை அவளுடைய சரீரம் பெற்றுக் கொள்ளும்போது அது என்னவாகும்? அது வெறுமனே அச்சாரம் என்றால் என்ன என்று தெரியுமா? அச்சாரம் என்றால் நாம் எடுத்து கொண்ட காரியத்திற்கு உண்டான முதல் தவணை. அது ஒரு உத்தரவாதம்; அந்த காரியம் அதைப் பாதுகாக்கிறது. இந்த கொடிய புற்று நோயை அவள் பெற்றிருந்தாலும், இப்பொழுதே அவள் பெற்றுக் கொண்ட இந்த அச்சாரத்தின் மூலமாக அவள் சுகத்தை பெற்றுக் கொண்டாள். அது அவள் ஜீவனை எடுத்துப் போட்டிருக்கும். இப்போது அவள் இங்கு நலமாகவும், நன்றாகவும் அமர்ந்திருக்கிறாள். 8. இப்போது, இந்த ஒரு ஸ்திரீக்கு ஏற்பட்டது போல, எந்த ஒரு நபருக்கும் ஏற்படவில்லையென்றால், இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீக சித்தத்திற்கு இது ஒரு பரிபூரணமான அத்தாட்சியாக இருக்கும். புரிந்ததா? ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தேவன் செய்வதில்லை, "விரும்புகிறவன் எவனோ, என்னிடத்தில் வரக் கடவன்”, இது அவர்களுக்கு மட்டும்தான்! பாருங்கள்! இது உங்களுடைய விசுவாசத்தின் படியே நம்புகிறவர்களுக்கு மட்டும் தான் நடக்கும். இப்போது, நேற்றைய இரவில் பயங்கரமான புழுக்கத்தில் இந்த கட்டிடத்தில் உட்கார வைத்தது போல இன்றைய இரவிலும் நான் அப்படி செய்யாமலிருக்க முயற்சிக்கிறேன். சில நிமிடங்களில், நான் நம்முடைய கர்த்தரின் இன்றைய நாளின் ஊழியத்தைக் குறித்து தொடர்ந்து பேச விரும்புகிறேன். வேதாகமத்தில் இருக்கும் அநேக மக்கள் வேதாகமத்தை ஒரு சரித்திர புத்தகம் போல் போதித்திருக்கிறார்கள். அது அவ்வாறு தான் உள்ளது. ஆனால், இது சரித்திரத்தைக் காட்டிலும் மேலானது. இது ஒரு தீர்க்கதரிசன புத்தகம் கூட. அது முன்னுரைக்கிறது... என்ன நடந்தது என்றும்; என்ன நடக்கப்போகிறது என்றும் சொல்கிறது; அது உண்மை என்று ஏற்றுக் கொள்வீர்களா? இப்போது அதே இயேசு இருந்தவராக, இருக்கிறவராக மற்றும் இருக்கப் போகிறவராக இருக்கிறார். பாருங்கள்; எல்லா வேத வசனத்திலும் முழுவதுமாக அவர் அதே இயேசுவாக இருக்கிறார். அதே கிறிஸ்துவாக வேதத்தில் முழுவதுமாக இருக்கிறார். ஆதியில் அவர் இருந்தார், புத்தகத்தின் நடுவிலும் அவர் இங்கு இருக்கிறார்: இதோ, நான் வருகிறேன், ஓ, கர்த்தாவே உம்முடைய புஸ்தகச் சுருளில் உம்முடைய சித்தத்தை செய்யும்படியாக நான் வருகிறேன். இந்த முடிவில் அவர் அல்பாவும் ஒமேகாவுமாக, துவக்கமும் முடிவுமாக; இருந்தவராக, இருக்கிறவராக, வருகிறவராக அவர் இருக்கிறார். தாவீதின் வேரும் சந்ததியுமாக இருக்கிறார். விடிவெள்ளி நட்சத்திரம், சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி; ஏனென்றால், அவர் அப்படியாகவே இருக்கிறார். அது அவரேதான். அது உண்மைதானே. அவரே இம்மானுவேல்; தாவீதின் வேரும் சந்ததியுமாக, அவரே இரண்டுமாக இருக்கிறார். புரிந்ததா? 9.இப்போது அவருடைய ஊழியம் நடந்து கொண்டிருக்கிறது. அநேக மக்கள் வேதாகமத்தை சரித்திரமாக போதிக்கிறார்கள். அது நல்லது தான்; வேதாகம பாடசாலையில் மற்றும் வேதாகம கல்லூரியில் நாம் கற்றுக் கொண்டது நல்லது தான். ஆனால் சகோதரரே, அது அப்போது சரிதான். ஆனால் இப்போதைய காரியத்தை குறித்து என்ன? அதை பாடசாலையில் நீங்கள் பார்க்க முடியாது. அதை நீங்கள் பரம்பரை அறிவு மூலமாக தெரிந்து கொள்ள முடியாது. வம்ச பாரம்பரியம் மூலமும் முடியாது. தேவனின் முன்னால் நீங்கள் முழங்கால் மூலமாக மட்டுமே அதை அறிந்து கொள்ள முடியும். கல்வி அறிவினால் அறிந்து கொள்ள முடியாது. முழு இருதயத்தை ஒப்புக் கொடுத்தல் மூலமே அதை அறிந்து கொள்ளலாம். தேவன் இருதயத்தில் கிரியை செய்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உதாரணமாக நான் இங்கு வரும்போது, இந்த இரவின்பொழுது இந்த கட்டிடத்தில் மிகவும் வெப்பமாக இருந்தால், சுவற்றில் ஒரு குளுமையாக உள்ள ஆர்டிக் இடத்தைப் போல் உள்ள குளிர்ச்சியான படத்தை இங்கு உள்ள சுவற்றில் நீங்கள் வரைந்திருந்தால், அது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அப்படித்தான் இருக்க நான் விரும்புகிறேன். அவ்வாறு ஒரு வரைந்த படம் இந்த கட்டிடத்தை குளுமையாக்காது. அது வெறுமனே வரைந்த படந்தானே? இன்னொரு உதாரணமாக நீங்கள் குளிரில் உறைந்து இருக்கிறீர்கள். அப்போது எரியும் அக்கினி ஜுவாலையை போன்று ஒரு படத்தை நான் வரைந்து, ஜனங்கள் அதை சுற்றி நின்றாலும் அது உங்களுக்கு எந்த ஒரு அனலும் தராது. இதோ அங்கே பாருங்கள் நெருப்பு இருக்கிறது என்று சொன்னாலும், அது ஒரு வரையப்பட்ட அக்கினியாக இருப்பதினால், அதின் மூலம் எந்த ஒரு அனலையும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாது. அது உங்களுக்கு அனலைக் கொடுக்காது. நீங்களாகவே அந்த நெருப்பை மூட்டவேண்டும். அன்றைக்கு இயேசு என்னவாக இருந்தாரோ, இப்பொழுதும் அவர் அப்படியாகவே இருக்கிறார். அவர் நெருப்பாக இருப்பாரென்றால், நம்முடைய இருதயத்திற்கு இதமானவராகவும், இனிமையானவராகவும் மற்றும் புயல் நேரத்தில் அடைக்கலமாகவும் இருப்பார். அவர் இன்றும் அவ்வாறே இருக்கிறார். 10. சில நாட்களிற்கு முன்பு யாரோ ஒருவர் சொன்னார், "சகோதரர் பிரான்ஹாம், சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்...", அவர் என்னுடைய நண்பர். மற்றும் மிக பிரஸ்தாபமான ஒரு வானொலி சுவிசேஷகராக இருக்கிறார். நாங்கள் ஒரே சபையை சேர்ந்தவர்கள். "சகோதரர் பிரான்ஹாம், இங்குள்ள மேற்கு கடற்கரை பக்கத்தில் நீங்கள் இருக்கும் போது சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்", என்று அவர் சொன்னார். அதற்கு நான், "டாக்டர், அதை செய்கிறேன்”, என்றேன். அதற்கு அவர், "அந்த தெய்வீக சுகத்தை அல்லாமல், வார்த்தையை பிரசங்கியுங்கள்", என்றார். அதற்கு நான், "வார்த்தையை தான் பிரசங்கிக்கிறேன் ஐயா", என்றேன். அதற்கு அவர், "பாருங்கள் சகோதரர் பிரான்ஹாம், சுவிசேஷகம் தேவனின் வார்த்தையாக உள்ளது", என்றார். அதற்கு நான், "ஒட்டுமொத்தமாக அப்படி இல்லை சகோதரரே, சுவிசேஷகம் நம்மிடத்தில் வார்த்தை மூலமாக மட்டுமே வரவில்லை. ஆனால் வல்லமையினாலும் மற்றும் வார்த்தையை பிரசங்கிக்க பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு மூலமாகவும் உள்ளது. வார்த்தை கொல்லுகிறது. ஆனால் ஆவியோ ஜீவனைத் தருகிறது”, என்று வேதாகமம் சொல்கிறது என்று கூறினேன். பாருங்கள்? அது அவ்வாறே இருக்க வேண்டும். இயேசு, *நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்", என்றார். அதின் வியாக்கியானம் என்னவென்றால், உலகமெங்கும் சென்று பரிசுத்த ஆவியினால், வார்த்தையின், வல்லமையை அதின் செயல்பாட்டில் காண்பியுங்கள் என்று வேதாகமத்தில் விவரித்துள்ளது. விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். 11. இன்றைக்கு நாம் சொல்லுகிறோம், என்ன அடையாளங்கள்?", நாம் சபைக்கு போகிறோம், நம்முடைய கடன்களை கட்டுகிறோம், மற்றும் நாம் அண்டை வீட்டாரை சரியாக நடத்துகிறோம். அது அருமையாக இருக்கிறது. ஆனால் இயேசு அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, "இதை விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது.வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்", என்று இயேசு சொன்னார். (டேப்பில் காலியிடம்...) இந்த அடையாளங்களைத்தான் இயேசு சொன்னார். நம்முடைய ஊழியம் அதை மாற்றிவிட்டது. "ஓ, நான் சொல்லுகிறேன். அங்கே ஒரு உண்மையான விசுவாசி, அவன் கர்த்தரை நேசிக்கிறான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன் சபைக்கு போகிறான். சபைக்கு செலுத்த வேண்டியதை செலுத்துகிறான். மற்றும் அயலானை நன்றாக நடத்துகிறான்", என்று சொல்வார்கள். அது வெறும் ஒழுக்க செயல்கள் மட்டுமே. ஒரு மனிதனுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்து, இயற்கைக்கு மேம்பட்ட வல்லமை, செயலாக்கப்படுவதே, ஒரு மனிதனை விசுவாசியாக மாற்றுகிறது. அது தேவன் அவனை விசுவாசி என்று நிரூபிக்கிறார். இவைகள் (அவர்கள் அல்ல)விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும், என்று இயேசு சொன்னார். 12.நல்லது.இப்போது இயற்கைக்கு மேம்பட்ட காரியம் தான் மனிதர்களை குருடாக்குகிறது. அது எல்லா காலத்திலும் அவ்வாறே உள்ளது. ஆனால் இயற்கைக்கு மேம்பட்டது செயலாக்கப்படும்போது அது அற்புதமாக இல்லையா? "பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடுகிறது, அல்லது கழுகுகள் கூடும் இடத்தில்", காலங்கள் ஊடாக அது அவ்வாறே இருந்தது. மனிதர்கள் மந்தமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, அவர்களின் உபதேசங்களுக்கு, தத்துவத்திற்கு மற்றும் பல காரியங்களுக்கு செவி கொடுக்கிறார்கள். மற்றும் அந்த தத்துவங்கள் தான்... ஆயினும் அது மனிதனின் இருதயத்தை திருப்திப்படுத்தவில்லை. இயற்கைக்கு மேம்பட்டது காட்சியில் வரும்போது, அதாவது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாட்களில் நடந்தது போல இயற்கைக்கு மேம்பட்ட காரியங்கள் காட்சியில் வந்தபோது, அதற்கு பின்பும் அவர்களுடைய அருமையான பிரதான ஆசாரியர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் மற்றும் தத்துவக்காரர்களை அவர்கள் கொண்டிருந்தாலும்... இயேசு அவருடைய வல்லமையினாலும் மற்றும் தேவனை பிரத்தியட்சப்படுத்தும் வண்ணமாக காட்சியில் வந்தபோது, மக்கள் அவருக்கு செவி கொடுப்பதற்கு அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ஏனெனில், அது இயற்கையின் நிலைக்கு மேலானதாக இருந்தது. மற்றும் எல்லா மனிதர்களும் கண்டிப்பாக அறிந்திருக்கிறார்கள், அவர்கள் கொண்ட எல்லா கல்வியும், தத்துவமும் மற்ற காரியமும் அவர்களோடு கல்லறைக்குள் அழுகிபோனது. அதை நாம் அறிந்திருக்கிறோம். எங்கே இயற்கைக்கு மேம்பட்ட காரியம் உள்ளதோ அது அந்த கல்லறையையும் தாண்டி கிழித்து கொண்டு செல்லும். அநேக நேரங்களில் மக்கள் இவற்றையெல்லாம் பார்த்தும் அவர்கள் குறை கூறுபவர்களாக இருப்பார்களென்றால், மற்றும் இருதயத்தைத் திறந்து கொடுக்காதிருப்பார்களென்றால்; அவர்கள் சொந்த கருத்தை சொல்வார்களென்றால் அவருக்கு செய்தது போலவே இருக்கும். அவர்கள் அவரை நோக்கி அவர் பெயெல்செபூல், பிசாசுகளின் தலைவன், பிசாசுகளைத் துரத்துகிறான். அவனுக்கு இக்காரியங்கள் எல்லாம் தெரியும்; அவற்றை அவன் காண்கிறான். "ஆம் பெயெல்செபூல் அவைகளை அவருக்கு காண்பிக்கிறான் மற்றும்...", அப்படியாக பேசி அவர்கள் மேம்பட்ட காரியத்தை தாண்டி செல்கிறார்கள். ஆனால் சிலர் அவரை நம்பினார்கள்; அவரை விசுவாசித்தவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்; அவரை விசுவாசித்தவர்கள் சுகத்தை பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இயேசு தாமே இந்த இரவுப்பொழுதில் என்னுடைய கோட்டையும் மற்றும் காலனியைப் போட்டு இங்கு நின்று கொண்டு இருந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வடிவத்தில் இருந்தாலும், இப்பொழுது செய்யும் இந்த காரியத்திற்கு மேலாக உங்களுக்கு எந்த ஒரு உதவியும், செய்ய முடியாது. உங்களுக்கு செய்யும் இந்த காரியத்திற்கு மேலாக எந்த உதவியும் உங்களுக்கு செய்ய முடியாது. அது உங்களுக்கு தெரியுமா? அவர் ஓர் இடத்திற்கு சென்ற போது, "அங்கு அநேக மகத்தான காரியங்களை அவரால் செய்ய முடிந்திருந்தாலும், அவர்களுடைய அவிசுவாசத்தால் அங்கு எந்த ஒரு காரியத்தையும் அவரால் செய்ய முடியவில்லை", என்று வேதாகமம் கூறுகிறது. 13. சில குருடர்கள் அவரை தொடர்ந்து வந்தபோது அவர், அவர்கள் கண்களை தொட்டு, "உம்முடைய விசுவாசத்தின்படி உமக்கு ஆகக்கடவது”, என்றார். அதைக் குறித்து பிதாவானவர் அவருக்கு எதையும் காண்பிக்கவில்லை, வெறுமனே அவர்கள் கண்களை தொட்டார். ஆனால் லாசருவை அவர் அழைத்தபோது ஏற்கனவே காண்பிக்கப்பட்டதால் அவர், "லாசருவே வெளியே வா”, என்றார். மற்றும் மற்ற மக்களை குறித்து பிதாவானவர் தரிசனத்தில், என்ன செய்யவேண்டும் என்று அவருக்குக் காண்பிக்கப்பட்டதோ, அதன்படி அவர்களை அவர் அழைத்து அநேக காரியங்களை செய்தார். இப்படி இருந்தும் மற்றவர்கள் வரும்போது அவர் அவர்களைத் தொட்டு, "உம்முடைய விசுவாசத்தின் படி ஆகக்கடவது", என்று சொன்னார். உதிரப்போக்கு இருந்த பெரும்பாடு உள்ள ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்ட போது, அவர் சுற்றி திரும்பிப் பார்த்து என்னிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு போனது. யாரோ ஒருவர் என்னை தொட்டார் என்று அவர் சொன்னார். அதை பிதாவானவர் அவருக்கு காண்பிக்கவில்லை. ஆனால் அது உணர்வுபூர்வமாக இருந்தது. (ஆவி) வல்லமை புறப்பட்டு சென்றது. குமாரனுக்குள் இருக்கிற அவளுடைய விசுவாசத்தை, பிதாவானவர் கணம் பண்ணினார். நான் சொல்லுவது உங்களுக்கு புரிகிறதா? அங்கு அவள் சுகமடைந்தாள். 14. வேதாகமத்தில் இருக்கும் அதே வார்த்தை இரட்சிக்கப்பட்டு மற்றும் சுகம்பெற்று என்று வியாக்கியானம் பண்ணப்பட்டது, அதே வார்த்தையை எல்லா வேத வசனத்திலும் நீங்கள் காணலாம். அதை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இப்பொழுது, நல்லது, நீங்கள் இரட்சிக்கப்பட்டபோது, அது ஆவிக்குரிய ரீதியாகவும், அல்லது மாம்ச ரீதியாகவும் இரட்சிக்கப்பட்டாய்... அந்த அந்த ஸ்திரீயிடத்தில் அவர், "உம்முடைய விசுவாசம் உம்மை இரட்சித்தது", என்றார். மாம்ச ரீதியாக, நீ இரட்சிக்கப்பட்டாய். இது என்னவென்றால் இது மீட்புக்குள்ளானது, மற்றும் செலுத்தப்பட்ட பரிகாரத்தில் இருக்கிறது. இது தேவனின் திட்டத்தில் உள்ளது. நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் இரட்சிக்கப்படலாம் அல்லது மாம்ச ரீதியாக இரட்சிக்கப்படலாம். ஏனெனில் நம்முடைய அக்கிரமத்திற்காக அவர் நொறுக்கப்பட்டார்; அவருடைய தழும்புகளினால் நாம் சுகமானோம்; அது சரிதானே? ஆகவே இது உம்முடைய விசுவாசத்தைக் குறித்து உள்ளது. அவருடைய அன்புள்ள இரக்கத்தினால் ஊழியக்காரர்கள் காலங்கள் ஊடாக அந்த தேசத்தில் கடந்து வந்து அருமையான இந்த வேத வார்த்தையை பிரசங்கித்ததினால், பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, இரட்சிக்கப் பட்டு மற்றும் சுகத்தை பெற்றுக் கொண்டார்கள். மற்றும் பல காரியங்களைப் பெற்றுக் கொண்டனர். பிறகு கடைசி நாட்களில் அவருடைய இராஜாதிபத்திய இரக்கத்தினால் கடைசி நாட்களில் அவர் வாக்குத்தத்தம் செய்தது போல்... இந்த கடைசி நாட்களில் வந்தபோது... "என்னுடைய ஆவியை ஊற்றுவேன்", அது மட்டுமல்லாமல் முன்மாரி மற்றும் பின்மாரி மழை இந்த கடைசி நாட்களில் இருக்கும்; மற்றும் பின் நாட்களில் மகத்தான ஆசீர்வாதத்தை மக்களுக்கு அவர் அனுப்புவார். “சத்ருவானவன் வெள்ளம்போல் வரும்போது, நான் அவனுக்கு விரோதமாய் கொடியேற்றுவேன்!", புரிந்ததா? 15. நாத்திகம் மற்றும் பல காரியங்கள் முன்னேறி கொண்டிருக்கையில் மற்றும் சபைகள் பின்மாற்றத்தில் சென்று, சம்பிரதாயமாக போன நிலையில் பிரியமான என்னுடைய சகோதரரே சகோதரரே சகோதரிகளே நான் இதை உங்களுக்கு சொல்லட்டும். உங்களுடைய சகோதரனாக ஏற்றுக் கொள்வீர்களென்றால் நமக்கு ஒரு எழுப்புதல் தேவை. நான் எதையும் இழிவுபடுத்த எண்ணவில்லை. நான் என்னுடைய இருதயத்திலிருந்து பேசுகிறேன்; நமக்கு நீண்ட நேரம் நடக்கும் கூட்டங்கள் அநேகம் நாம் கொண்டிருந்தாலும், நமக்கு எழுப்புதல் இல்லை. நமக்கு மகத்தான ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக பில்லி கிரஹாம் ஒரு அருமையான மனிதன்; சார்லஸ் ஃபுல்லர், டாக்டர்.டிஹான் மற்றும் பலரை என்னால் சொல்லக்கூடும். ஹைமான் ஆப்பிள்மென் மற்றும் பல மகத்தான மனிதர்கள் உள்ளனர். நமக்கு மகத்தான மற்றும் சகோதரர் ராபர்ட்ஸ், சகோதரர் பிரிமேன் மற்றும் என்னுடைய கூட்டங்களும் உள்ளது. நமக்கு பெரிய கூட்டம் கூடுகிறது. ஆனால் எழுப்புதல் இல்லை. மக்கள் முன்னாக தள்ளாடிக் கொண்டு முன்னால் வந்து அறிக்கையிட்டு பின்பு செல்லும்படி கொண்டு வருகிறோம். ஆனால் நமக்கு பழைய காலத்து பக்தி தேவையாக உள்ளது. அது எல்லாவற்றையும் உடைத்து கீழே தள்ளிவிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் ஆழமான எழுப்புதல் எழும்பி, முழு பட்டணத்தின் ஊடாக சென்று சாராயக் கடைகளை மற்றும் எல்லாவற்றையும் மூடச் செய்து; எல்லாவற்றையும் ஒழுங்கு செய்யவேண்டும். அது தான் எழுப்புதல், புரிந்ததா! வெறுமனே முன்னால் வந்து அறிக்கையிட்டு பின்பு செல்வது அது ஒரு எழுப்புதல் இல்லை. அது வெறும் ஒரு முறைமை,வெதுவெதுப்பான நிலையில் உள்ளது. நமக்கு ஒரு அசலான எழுப்புதல் வேண்டும். மற்றும் தேவன் அதை நமக்கு கிடைக்க உதவி செய்வாராக. 16. ஜனங்கள் பெரிய அளவில் கூடுவதை நீங்கள் காணும்போது அது எழுப்புதல் என்று அர்த்தம் அல்ல, அது வெறும் கூட்டம் கூடுவது தான், ஆனால் எழுப்புதல் என்றால் மக்கள் தேவனிடத்தில் சரியாக இருந்து ஜெபிக்கும்போது பட்டணம் முழுவதும் எழுப்புதலை துவங்கச் செய்யும். மற்றும் எல்லாவற்றையும் துவங்கச் செய்யும். நீங்கள் பார்த்தீர்களா? அது பாவத்தை தூரமாக தள்ளிவிட்டு, அவர்கள் அக்கிரமத்தை தூக்கி எறிவார்கள். தேவனிடத்தில் திரும்புங்கள். உங்கள் பாதையிலிருந்து திரும்பி, மறுபடியுமாக துவங்குங்கள். இப்போது இந்த பட்டணத்தில் அவ்வாறு இருக்கும் என்று நம்புகிறேன். இப்போது ஆவிக்குரிய வரத்தைக் குறித்து சகோதரர் பாக்ஸ்டெர் அவருடைய மதிய கூட்டத்தில் உங்களுக்கு போதிப்பார். கிருமி வியாதிகள் என்றால் என்ன; அவைகள் எவ்வாறு பிசாசுகளாக உள்ளது; மற்றும் மக்களைப் பிடித்து எவ்வாறு அவர்களை ஆட்கொள்கிறது என்பதையெல்லாம் சொல்லுவார். ஒவ்வொரு இரவிலும் ஒரு சிறிய கதையை உங்களுக்கு சொல்ல வேண்டுமென்றிருக்கிறேன். 17. இன்று இரவுப்பொழுதில் கர்த்தரின் தூதனானவரைக் குறித்து உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். அது அப்பட்டமான உண்மை. ஆனால் அதை நீங்கள் நம்பும்படியாக என்னால் செய்ய முடியாது. புரிகிறதா! உண்மை என்னவோ அதை மட்டும் தான் பேசுவேன். அதன்மேல் நீங்கள் வைக்கும் மனப்பாங்கு உங்களுடைய ஜெயத்தை நிர்ணயிக்கும்! அதை செயல்படுத்த எனக்கு எந்த வல்லமையும் கிடையாது. என்னுடைய பிரியமான தாயார் இந்த மேடையில் மரணத்தருவாயில் இருந்து கொண்டு என்னிடத்தில் இவ்வாறு சொல்லுவார்களென்றால், "மகனே உன்னை நான் என் மார்பில் சுமந்து நீர் என்னிடத்தில் ஜீவனை பெற்றுக் கொள்ள பால்குடிக்கும்போது, நீ சிறிய பிள்ளையாக இருந்தபோது சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லாத நேரத்தில் நீ சாப்பிட்டு ஜீவிக்கும்படியாக நான் மேஜையை விட்டு எழுந்து போனேன். என் அன்புள்ள மகனே இந்த காரியத்தினால் எனக்கு என்ன சம்பவிக்கும், சொல்லு?" என்று கேட்பார்களென்றால், அவர் எனக்கு எதையும் காண்பிக்காமல், என்னால் எதையும் சொல்லமுடியாது; ஏனெனில் மனிதனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மனிதனால் சொல்லக்கூடிய து காரியமும் இல்லை. 18. முதலாவதாக, பிதாவானவர் என்னிடத்தில் எதையும் காண்பிக்காமல், என்னால் ஏதும் செய்ய இயலாது என்று தேவ குமாரன் கூட சொன்னார். அவர் ஒருபோதும் பாவியாக இல்லை! மேலும் அவராலேயே முடியவில்லையென்றால், ஒரு பாவியான மனிதனாகிய நான், அவருக்கு மிஞ்சி என்னால் எப்படி செய்ய முடியும். அவர் கன்னிகையின் மூலமாக பிறந்த, தேவ குமாரன்.நான் பாவத்தில் பிறந்து அக்கிரமத்தில் உருவாகி பொய் பேசுகிறவனாக உலகத்தில் வந்தேன்; பாதாளத்திற்கும் போக தகுதியானவனாக இருந்தேன். ஆனால் அவர் என்னை மீட்டார். மேலும் இந்த இரவுப்பொழுதில் அவருக்கு இருக்கும் ஒரே கரம் எதுவென்றால் என்னுடைய கரம் மற்றும் உங்களுடைய கரம். அவருக்கு இருக்கும் ஒரே வாய் என்னுடைய வாயும் மற்றும் உங்களுடைய வாயும் தான். நான் உன்னோடு இருப்பேன் இருப்பேன் உங்களுக்குள்ளாக இருப்பேன் இந்த உலகம் முடியும்வரை", என்றார். அது அவருடைய வார்த்தை தானே? புரிகிறதா! ஆகவே அது அவர் தான். "இதைப் பேசுவது நீங்கள் அல்ல", என்று சொன்னார். உங்களுக்குள் நிவாசம் செய்யும் பரலோக பிதா அந்த மணிவேளைக்கானவைகளை அவர் சொல்லுவார்”, புரிகிறதா! 19. மேலும் கர்த்தரின் தூதனானவரை குறித்து நான் முதல் முதலாக அறிவித்தபோது மிகவும் கடினமாக இருந்தது. அநேக மக்கள் என்னுடைய (பேராயர்) மற்றும் என்னுடைய மேய்ப்பர் கூட, அவர் ஒரு மிஸ்னரி பாப்டிஸ்ட் பிரிவில் தலைவனாக இருக்கிறார். அவரிடத்தில் நான் சென்று சொன்னபோது அதாவது, "டாக்டர் டேவிஸ்ஸிடம் கர்த்தரின் தூதனானவரைக் குறித்து நான் சொன்னேன்". அதற்கு அவர், "பில்லி நேற்றைய இரவில் என்ன உணவு சாப்பிட்டாயோ,நீ ஏதோ பேய் கனவு கண்டு இருப்பாய்'', என்றார். சகோதரன் லிண்ட்சே எழுதின அந்த கட்டுரையை "சுகமளிக்கும் சத்தம்", நீங்கள் படித்திருப்பீர்கள் சமீபமாக அவர் மன்னிப்பு கேட்டதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர், "அந்த இரவு என்ன சாப்பிட்டாய்", என்றார். அதற்கு நான், "ஐயா நீங்கள் அப்படி கேட்டது எனக்குப் பிடிக்கவில்லை", என்றேன். அதற்கு அவர், "ஆ, அதை குறித்து மறந்து வீட்டிற்கு செல்", என்றார். 20. நான், "டாக்டர். டேவிஸ், பாருங்கள் இதைக் குறித்து மறந்து வீட்டிற்கு செல்லும்படி நீங்கள் என்னிடத்தில் சொல்லலாம். ஆனால் எனக்குள் தேவன் ஒரு காரியத்தை நங்கூரப்படுத்தியுள்ளார். உங்களுக்கு நான் தேவையில்லை யென்றால் மற்றவர்கள் இருக்கிறார்கள். தேவனுக்காக வெளியே செல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்”, என்றேன். அது மிகவும் கடினமாக இருந்தது இது போல் செய்யமுடியாது என்று அவர்கள் சொன்னர்கள் மற்றும் அந்த சபையில் என்னுடைய கடைசி பிரசங்கம் "தாவீது மற்றும் கோலியாத்' தாவீதுக்கு இருந்த எதிர்ப்புகள். ஆயினும் கோலியாத் கொல்லப்பட்ட பின் மற்றவர்கள், இஸ்ரவேலர்கள் தைரியம் கொண்டு முன் சென்றார்கள். அது தான் நடந்தது. இதை செய்யமுடியும் என்று அவர்கள் பார்த்தபோது, மேடையில் இருந்த ஊழியக்காரர்கள், இந்த விஷயங்களை அறிய முடியும் என்று அவர்கள் உரிமை கோரவில்லை. ஆனால் வார்த்தையை விசுவாசித்தார்கள். அது அவர்களுக்கு தைரியம் கொடுத்து அவர்களை வெளியே செல்ல வைத்தது. அதில் ஒருவர் சகோதரர் ராபர்ட்ஸ் சகோதரர் ஓரல் மற்றும் சகோதரர் ஜாக்கர்ஸ் மற்றும் அவர்கள் எல்லோரும். அப்படிப்பட்ட மனிதர்கள் அந்த கூட்டத்தில் இருந்தார்கள். தரிசனத்தை அவர்கள் கண்டு எழும்பி ஊழிய களத்திற்கு சென்றார்கள்; இப்பொழுது அவர்கள் வெட்டிக் கொண்டு, பெலிஸ்தியர்களை அடித்து, மதில்களை தகர்த்தார்கள். அது தான் உண்மை. 21. இப்போது இந்த ஊழியக்களத்தை விட்டு நான் கிளம்புகிறேன். ஒன்று அல்லது இரண்டு அமெரிக்கா கூட்டங்கள் உள்ளது. இன்னொரு கூட்டம் எப்போது எனக்கு உள்ளதென்று, தேவனுக்கு மட்டுமே தெரியும். அதன் பிறகு எலியா கர்மேல் பர்வதத்திற்கு திரும்ப வந்தது போல் நான் திரும்ப வருவேன். சபைக்கு தேவன் ஏதோவொன்றை செய்ய இருக்கிறார் என்று நம்புகிறேன். கர்த்தர் மீது நான் காத்திருந்து அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்று நான் அறிந்து கொண்டு செய்யவேண்டும், அதற்கு பின் மகத்தான அசைவு கர்த்தரால் உண்டாகும். கர்த்தரின் வருகைக்கு நாம் சமீபமாக இருக்கிறோம் என்று எண்ணுகிறேன், "அவர் இக்காரியங்களை கீழே பூமியிலும் மற்றும் மேலே வானத்திலும் இந்த அடையாளங்களை நான் தெரியப்படுத்துவேன்...கர்த்தரின் நாள் வரும்", என்று அவர் சொன்னார். என்னை தெய்வீக சுகமளிக்கிறவர், தேவ குமாரனின் அவதாரம்; பிசாசு; சிந்தையை படித்து சொல்கிறவர், (குறி சொல்கிறவர்) மற்றும் அநேக விதமான பெயர்களைக் கொண்டும் என்னை வழக்கமாக அழைப்பார்கள். ஆனால் அது என்னை கொஞ்சமும் மாற்றமடைய செய்யவில்லை. அவர் இயேசு கிறிஸ்து; மற்றும் நாம் அவருடைய மக்கள். அவருடைய கிருபையால் நம்மை மீட்டார். அது தான் நாமாக இருக்கிறோம்; மற்றும் பிதாவின் சித்தத்தின்படி எல்லா காரியத்தையும் அவர் செய்கிறார். அதை நாம் விசுவாசிக்கிறோம். அப்படித் தானே! 22. அநேக முறை கூட்டங்களில் கர்த்தரின் தூதனானவர் தோன்றினார் அநேகருக்கு அதைக் குறித்துத் தெரியும். அது இவ்வண்ணமாக தோன்றும்... அந்த இரவு, எல்லா காலங்களினூடாக அது பார்ப்பதற்கு ஒரு அக்கினி ஸ்தம்பமாகவும், இவ்வளவு தடிப்பாகவும், இவ்வளவு நீளமாகவும் தோன்றினது. அது பட்சிக்கும் அக்கினி போன்று சுழல் காற்று போல சுழன்று வருகிறது. (சகோதரர் பிரான்ஹாம் கர்த்தரின் தூதனானவர், அவரிடத்தில் வரும்போது வரும் சத்தத்தை விவரிக்கிறார்) ஆயிரம் முறை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு இருக்கிறார்கள்; அது கண்களினால் காணும்படி தோன்றியுள்ளது! கொஞ்சம் காலம் முன் இந்தியானாவில் உள்ள போர்ட் வெய்ன்னில் ஒரு கூட்டத்தில் நின்று இருந்தேன். அங்கு நான் பேசி கொண்டிருந்தேன். மற்றும் அங்கு இருக்கும் கூட்டத்தினர் மிகவும் ஆணவமாக இருந்தார்கள். அது ஒரு கலைக் கூடம். 'அது அந்த கர்த்தரின் தூதனானவர் என்று நான் சொல்ல முயற்சித்தேன்”, மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த குளிர்ந்துபோன சூழ்நிலையை என்னால் உணர முடிந்தது. மற்றவர்களை போல் சிந்திக்கவில்லை. அதில் சிலர் பேர் குறிப்பிட்ட வண்ணமாக வியாதியஸ்தர்கள், மற்றவர்கள் அப்படியாக நடிக்கிறார்கள், ஆனால் அவர்கள் வியாதியஸ்தர் அல்ல. ஒரு வியாதிபட்ட மனிதன் உதவியை நாடுகிறான், அவர்களிடத்தில் நீங்கள் பேசலாம். உண்மையான பசி கொண்ட மனிதனிடத்தில் நீங்கள் ஆகாரத்தைக் குறித்து அவனிடத்தில் பேசலாம். ஆனால் அவன் சாப்பிட்டிருந்தால் இரவு உணவைக் குறித்து இனி அவனுக்கு எந்த ஒரு விருப்பமும் இருக்காது. புரிந்ததா? நல்லது அதுதான். தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே அக்காரியங்கள் அவசியமாக உள்ளது. சில நேரத்தில் உங்களுக்கும் தேவை இருக்கும்; ஆகவே அப்போது வேறுவிதமாக இருக்கும். இங்கு உங்கள் தாயோ அல்லது மகனோ அல்லது யாராவது ஒருவர் மரித்துக் கொண்டிருப்பார்களென்றால் அது வித்தியாசமாக இருக்கும். மற்றும் மருத்துவர்கள் அவர்கள் விஷயத்தில் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லையென்று சொல்லும்போது, வித்தியாசமாயிருக்கும். 23. ஆனால் அவ்வாறு அவர்கள் நடந்து கொண்டார்கள் மற்றும் நான், "என்னால் உங்களை விசுவாசிக்க வைக்க முடியாது", என்றேன். அந்த இரவில் மக்களுக்காக நான் ஜெபிக்கத் துவங்கினேன். ஜெபிக்கத் துவங்குகையில் ஒரு சிறிய பையன் ஜெப வரிசையில் முதலாவதாக இருந்தான். ஒரு சிறிய பையன் அவன் பாதம் முடமாக இருந்தது. மற்றும் அது போலியோவாக இருந்தது. அந்த மருந்து அவன் கால்களை சிறியதாக்கியிருந்தது. பெரிய பேபி பியானோ போல் ஒன்று அங்கு இருந்தது. மற்றும் அதில் நசரேய பெண் அதை வாசித்து கொண்டிருந்தாள். "மகத்தான மருத்துவர் அருகாமையில் இருக்கிறார்", என்ற பாடலையும் "பரிவுள்ள இயேசு" என்ற பாடலையும் வாசித்து கொண்டிருந்தாள், மற்றும் அந்த பிள்ளையின் தாய் அங்கு அமர்ந்து இருந்தாள். உதவியாளர்கள் அந்த பிள்ளையை ஜெப வரிசையில் கொண்டு வந்தார்கள். 24. மற்றும் அந்த சிறிய பையனுக்கு நான் ஜெபித்தேன். நான், "பரலோகப் பிதாவே இரக்கமாக இருக்கும்படி உங்களிடம் கேட்கிறேன்", என்றேன். அங்கு இருக்கும் பாதுகாவலர் விளக்கை என் முகத்திற்கு நேராக திருப்பியிருந்தார் என்று நினைத்தேன். அது மிகவும் பிரகாசமாக, பிரகாசமாக ஆனது. "கர்த்தாவே, என்று நான் கூறினேன்... ஓ, என்னே, அந்த மனிதன், அவன் என்னை போல் இல்லையென்றால் அந்த காரியத்தை செய்யாத அளவிற்கு அவர் கண்ணியமாக இருந்தால் நலமாயிருக்கும்”, என்று நான் நினைத்தேன். அது மேலும் பிரகாசமாய் பிரகாசமாய் போய்க் கொண்டே போனது, "ஓ, என்னே, என்று நான் நினைத்தேன். என் கண்களை ஏறெடுத்து அவர் பக்கமாய் நோக்கி பார்த்ன்ே... என் கண்களை திறந்தேன் அல்லது அவர் அதை செய்யாமல் நிறுத்தும்படிக்கு என் கண்களை அசைத்தேன், நான் அதை செய்த போது அது அவனல்ல, அது சுழல் காற்று போல, சுழன்று வரும் கர்த்தரின் தூதனானவர் போன்று இருந்தது. அது என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இப்போது எனக்கு சரியாகத் தெரியாது. உண்மையை சொல்லபோனால் நான் குழந்தையை கீழே விட்டேனா அல்லது அவன் என் கரங்களிலிருந்து குதித்தானா அல்லது பரிசுத்த ஆவியானவர் அவனை எடுத்தாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவன் தரையில் இறங்கினான். அவனுடைய பாதம் எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு அது பொருத்தமாக இருந்ததினால், அவன் நடக்கத் துவங்கினான். அதை அவன் தாயார் கண்டார்கள். பிறகு என்ன நடந்தது, அவள் அலறிக்கொண்டு குதித்து முன் வந்தாள்; அவள் அந்த வெளிச்சத்தைக் கண்டாள் மற்றும் அந்த நசரேய பெண் நிமிந்து பார்த்தாள்... நசரேய சபையில் இருந்து எத்தனை நசரேயர்கள் இங்கு இருக்கிறீர்கள்? நசரேயர்கள் இங்கு இல்லையா?... அதோ அங்கு உள்ளார்கள்! நல்லது, பின்பக்கமாக உள்ளார்கள் அருமை! 25.சந்தோஷமாக இருக்கும்போது உரக்க கத்துகிற அளவுக்கு நசரேய மக்களுக்கு போதுமான பக்தி இருந்தது. ஆகவே அந்த நசரேய வாலிப மகள் மிகவும் அழகாகவும் மற்றும் நீளமான பழுப்பு நிற முடியோடும் இருந்தாள். அவ்விதம் அவள் வளர்க்கப்பட்டாள். அவள் எழும்பி நின்று, எந்த அளவிற்கு உரக்க கத்தமுடியுமோ அந்த அளவிற்கு உரக்க கத்த துவங்கினாள். சத்தமாக அலறிக்கொண்டு பியானோவை விட்டு வெளியே ஓடி வந்தாள். அவள் வெளியே ஓடிய பின்னும் அந்த பியானோ தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருந்தது. மகத்தான மருத்துவர் அருகில் உள்ளார், பரிவுள்ள இயேசு, சோகம் அடைந்த இருதயத்திடம் சந்தோஷப்பட பேசுகிறார். மேலும் இந்த கர்த்தரின் தூதனானவர் அங்கு இறங்கினார். எழுநூறுபோல் எண்ணிக்கை உள்ள மக்கள் பாதையில் விழுந்து கொண்டு, முன் வந்து, தங்கள் இருதயத்தைக் கிறிஸ்துவிற்குக் கொடுத்தார்கள். நூற்றுக்கும் மேலான முறை அவர் தன்னைத் தானே நிரூபித்துக் கொண்டார். அநேக கட்டுரைகள் எழுதியிருந்த புத்தகம் அங்கிருந்தது. அதை நீங்கள் எடுத்துக் கொள்வீர்களென்றால், அதிலுள்ள காரியங்களை சொல்லு வதற்கு எனக்கு நேரமில்லை. ஓ, அது மனோதத்துவம் என்று சிலர் சொல்லலாம். 26. மேலும் காம்தேன், அர்கன்ஸாஸ்வில், அந்த புகைப் படத்தை நாங்கள் பெற்றுக் கொண்டோம். அது அந்த புகைப்படக்காரரிடம் இருந்தது. கூட்டத்தினூடாக அந்த வெளிச்சம் வட்ட வடிவத்தில் சுழன்று கொண்டு கீழாக வந்தது. ஒரு ஊழியக்காரர் முன் ஓடிவந்து அதை தன் கைகளால் அணைத்துக் கொள்ளும்படி வந்தார்... அதனால் அவர் அந்த மேடையிலேயே குருடாக்கப்பட்டார். அந்த புகைப்படத்தின் முழு காரியமும், அந்த புத்தகத்தில் உள்ளது. அதன் பிறகு ஹூஸ்டன், டெக்ஸாஸில், உள்ள ஒரு இசை அரங்கத்தில் எங்களுக்கு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அதில் நாலாயிரம் மக்கள் அமரலாம் என்று எண்ணுகிறேன். அங்கு போதிய இடம் இல்லாததால் விளையாட்டரங்கத்திற்கு சென்றோம். அதில் முப்பதாயிரம் மக்களை அமர வைக்கமுடியும். மேலும் அங்கு ஒரு பாப்டிஸ்ட் மத குரு அங்கிருந்தார். அவர் பெயரை நான் சொல்லமாட்டேன். ஏனெனில் ஒரு ஊழியக்காரரின் பெயரை வெளிப்படையாக சொல்வது நல்லதல்ல. ஆனால் கிழக்கு பாப்டிஸ்ட் கூடுகை பள்ளியிலிருந்து சமீபமாக வெளிவந்தவர். வெறும் முப்பது வயதுடையவராக இருப்பார். அவர் பத்திரிகையில் ஒரு சவாலை வைத்தார். அவர், "சகோதரர் பிரான்ஹாம் ஒரு மத மோசடிக்காரர், மற்றும் அவரைப் பட்டணத்தை விட்டு துரத்த வேண்டும் மற்றும் அந்த காரியத்தை நான் தான் செய்யவேண்டும்", என்றார். ஆகவே அவர் மிகவும் கரடு முரடாக இருந்தார். 27. ரைஸ் விடுதியில் தங்கி இருந்தேன். எத்தனை பேருக்கு சங்கை திருவாளர் பாஸ்வொர்த்தைத் தெரியும்? அனேகமாக எல்லோருக்கும் தெரியும். அருமையான குணாலட்சணம் கொண்டவராக, இங்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று எண்ணினேன். அவருக்கு எழுபத்தி மூன்று வயதாகிறது. என் அறைக்கு வந்தார். அவர், “சகோதரர் பிரான்ஹாம், இன்றைக்கு செய்தித்தாளைப் பார்த்தீர்களா? பெரிய கட்டுரை உள்ளது; ஓ! அவர் அந்த ஊழியக்காரர் என்னை கிழித்திருந்தார் என்றார். அவர், "நாம் அந்த சவாலை எடுத்துக் கொள்ளலாம்", என்றார். ஒலிநாடாவில் இடைவெளி) இந்த தேசம் அது நொறுங்கும் நிலையில் உள்ளது; ஏனெனில், நம்முடைய அரசியல் மற்றும் எல்லா காரியமும் பிரிக்கப்பட்டு உள்ளது; ஆகையால் தான் இந்தியர்கள் (செவ்விந்தியர்) வெள்ளை மனிதர்களிடம் தோல்வியுற்றார்கள். இந்தியர்கள் எல்லோரும் ஒன்றாக கூடியிருந்திருப்பார்களென்றால், அமெரிக்கா தேசம் இந்தியர்களுக்கு உரியதாகி இருந்திருக்கும்; ஆனால் அவர்களுக்குள் பிரிவினை ஆனது; மற்றும் அந்த பழங்குடியினர் ஒருவருக்கு ஒருவர் சண்டைபோட்டுக் கொண்டார்கள். ஆகையால் தான் நாம் வந்து இதை எடுத்துக் கொண்டோம். அந்த விதமாகத்தான் நாம் இழக்கப் போகிறோம். மற்றும் இன்றைக்கு சபை அந்தவிதமாகத் தான் இழந்து கொண்டிருக்கிறது; ஏனென்றால் நாம் ஒன்று கூடியில்லை. ஆனால் ஒரு நாள் அது அதை காண்பித்தது... அவர்கள் எல்லா இடத்திலிருந்தும் வந்தார்கள். ஒரு பெரிய இணைப்பாக இணைத்துக் கொண்டு அந்த ரோடியோஸ் (rodeos- அவர்கள் குதிரைப்பந்தயம் நடத்துகிறவர்கள்) அந்தப் பெரிய 'சாம் ஹூஸ்டன்', அரங்கத்தை கைப்பற்றி அவர்களுடைய பொருட்களால் அரங்கத்தை முழுவதுமாக நிரப்பினார்கள். 28. திருவாளர் பெஸ்ட், ஒரு வணிக ரீதியிலான புகைப்படக்காரரை பணியமர்த்தியிருந்தார். அவர், "இங்கு வந்து, என்னை நீங்கள் ஆறு பளபளக்கும் புகைப்படத்தை (ஆறு புகைப்படங்கள்) எடுங்கள்; அதில் அந்த வயதான மனிதனை நான் தாக்கும்படியான படத்தை போல் எடுங்கள். மற்றும் அவரைக் கிழித்தெறிந்து, அவருடைய தோலை உரித்து உப்புத் தடவி, நான் என் படிக்கும் அறையின் கதவின் மேல் தொங்கவிடப் போகிறேன்", என்று அவர் சொன்னார். ஒரு கிறிஸ்தவன் அவ்வாறு பேசுவான் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அவர்களின் கனிகளால் அவர்கள் அறியப்படுவார்கள். மேலும் ஆவியின் முதல் கனி அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம். எனினும் அந்த மனிதன் அவ்வாறு தான் சொன்னார். ஆகவே ஹூஸ்டன், டெக்ஸாஸில் உள்ள டக்லஸ் ஸ்டுடியோவைச் சேர்ந்த திருவாளர் கிப்பார்மேன் மற்றும் திருவாளர் அயெர்ஸ் வந்தார்கள். அந்த இரவில் மேடை மீது ஒரு பெரிய மேஜை போடப்பட்டிருந்தது. மற்றும் அங்கு லுக், லைப், டைம், கொள்ளியிர்ஸ் மற்றும் எல்லா பத்திரிக்கையாளர்களும் அங்கு இருந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்கள். ஆகவே விவாதம் ஆரம்பிக்கும் முன் திருவாளர் C.Y. ரம்சார்ரை எத்தனை பேருக்கு C.Y. ரம்சார்ரைத் தெரியும்? அவர் பாடல்களை வழிநடத்திக் கொண்டிருந்தார். அது முடிந்த பின் அவர் இவ்வாறு கூறினார், "பத்திரிக்கையில் நீங்கள் போட்டதைப் பார்த்தேன், சகோதரர் பிரான்ஹாம் ஒரு மோசடிக்காரர் மற்றும் அவரை இந்த பட்டினத்தை விட்டுத் துரத்த வேண்டும் என்று இருந்தது. இங்கு இருக்கும் மக்கள் பயபக்தியுள்ள மக்களை வெளியேற்றுவதற்கு பதில் சாராயம் விற்கும் மக்களை வெளியேற்றுவதில் உங்கள் நேரத்தைச் செலவு செய்வீர்களென்றால் உங்களுக்கு நலமாக இருக்கும்', என்றார். 29. மற்றும் அங்கு மக்கள் கூக்குரலிடத் தொடங்கினார்கள். நான் கீழே வரவேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார்கள். முப்பதாவது பால்கனியில் இருந்தேன். முப்பதாவது வட்டம், இரண்டு காவலாளிகளுடன் என்னுடைய சகோதரன் மற்றும் மனைவி, என் சிறிய மகள், மேலே சென்று அமர்ந்தோம். என்னை மேல் தளத்திற்குக் கொண்டு சென்றார்கள், அங்கு அமர்ந்திருந்தேன். நான், "அதில் எந்த சம்பந்தமும் நான் வைத்து கொள்ளப் போவதில்லை மற்றும் விவாதம் பண்ணுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை”, என்றேன். ஆகவே அந்த இரவில்... திருவாளர் பாஸ்வொர்த் மேடைக்குச் சென்றபின் அவர் எழுதி வைத்திருந்த தாளை எடுத்துக் கொண்டார், "பக்கவாட்டில் அமர்ந்திருந்த மக்கள் விவாதத்திற்கு நடுவராக இருந்தார்கள்; அவர், "திருவாளர் பெஸ்ட் விவாதத்தின் ஒரு பக்கத்தை மாத்திரம் எடுத்துள்ளார்”, என்னுடைய எதிராளி சொல்லுகிறார். "தெய்வீக சுகம் புதிய ஏற்பாட்டில் சொல்லித் தரப்படவில்லை. புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடுகளில் இருந்து எழுதப்பட்ட அறுநூறு வேத வசனங்களை இங்கு எழுதி உள்ளேன். தெய்வீக சுகத்தின் மேல் கிறிஸ்து கொண்டிருக்கும் மனப்பாங்கு இன்றும் எப்போதும் ஒரேபோல் தான் உள்ளது. திருவாளர் பெஸ்ட் இதை எடுத்து ஒன்றையாவது ஆட்சேபிப்பாரென்றால் அதுவும் வேதப்பாட கல்வி புத்தகத்தினால் அல்லாமல் வேதாகமத்தினால் செய்வாரென்றால், அதற்குமேல் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். நான் அப்படியாக சென்றுவிடுவேன். மற்றும் எப்போதுமே நான் பிழையில் தான் இருந்தேன் என்று சொல்லுவேன். அறுநூறு கேள்விகளை ஏதோவொன்றை, "இப்போது திருவாளர் பெஸ்ட் உங்களுக்கு சொல்லுவதற்கு எல்லா சுதந்திரம் உள்ளது", ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை; மேலும் அவர், "இதில் இருந்து ஒன்றை எடுத்து உங்களிடம் கேட்கிறேன். வேத வசனத்தின்படி அதை தவறு என்று நீங்கள் நிரூபிப்பீர்களென்றால், நான் இந்த மேடையைவிட்டு இறங்கிவிடுகிறேன். அது போதுமானதாக இருக்கும். அறுநூறு வசனங்கள் உள்ளன. நீங்கள் ஒன்றையாவது காண்பிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஒன்றையாவது அதற்கு எதிர்மறையாக காண்பிப்பீர்களென்றால் பிறகு நான் தவறு என்று சொல்லுவேன். இதை துவங்க நான் அறுநூறு காண்பிக்கிறேன்", பார்ப்பதற்கு மிகவும் மோசமான சூழ் நிலையாக உள்ளது அல்லவா. 30. ஆகவே அவர், "அதை செய்யமாட்டேன் என்றார். ஆகவே நடுவர் கேட்டார். நல்லது திருவாளர் பெஸ்ட் இதற்கு எனக்கு பதில் சொல்லுங்கள். யேகோவாவின் கூட்டு பெயர்கள் யேகோவாவின் மீட்பில் உள்ள கூட்டு பெயர்கள் இயேசுவிற்கு பொருந்துமா? ஆமாவா? இல்லையா? அது என்னை என் இருக்கையில் இருந்து குலுக்கும்படி செய்தது. திருவாளர் பெஸ்ட் அதற்கு பதில் சொல்ல முடியாதபடி இருந்தார். அவர் யேகோவாயீரேவென்றால் கர்த்தர் அவர் பலியை அருளுவார். அவர் யேகோவாயீரே இல்லையென்றால் அவர் இரட்சகர் அல்ல; மற்றும் அவர் யேகோவாயீரே என்றால் அவர் யேகோவா ராஃபா சுகமளிக்கிறவர் மற்றும் அவர் யேகோவாயீரே, யேகோவா ராஃபாவென்றால் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார். ஆகவே அவர் அதே சுகமளிக்கிறவர், அது முடிந்தது. இதற்கு மேல் எதுவும் சொல்லமுடியாது. ஆகவே திருவாளர் பெஸ்ட் மிகவும் கோபமடைந்து தரையை மிதித்து மேலும் கீழுமாக குதித்து, "அந்த தெய்வீக சுகமளிக்கிறவரை கொண்டு வாருங்கள் அவரை நான் பார்க்கட்டும்", என்றார். 31. மற்றும் சகோதரர் பாஸ்வொர்த் சொன்னார், “சகோதரர் பெஸ்ட் மன்னிக்கவும் சகோதரர் பிரான்ஹாம், தெய்வீக சுகமளிக்கிறவர் அல்ல மற்றும் எப்போதுமே அவர் அவ்வாறு சொன்னதில்லை, நீங்கள் இரட்சிப்பில் உங்களுக்கு விசுவாசம் உள்ளதா?", என்றார். "ஆம் ஐயா", என்றார். தெய்வீக இரட்சகர் என்று உங்களை அழைக்கும்படி விரும்புவீர்களா? தெய்வீக சுகத்தை குறித்து பிரசங்கிப்பதினால் சகோதரர் பிரான்ஹாம் தெய்வீக சுகமளிக்கிறவராக ஆகமுடியுமானால் இரட்சிப்பை பிரசங்கிப்பதினால் உங்களை தெய்வீக இரட்சகராகச் செய்யும். "நீங்கள் இரட்சகர் அல்லவென்று உங்களுக்கு தெரியும்", என்றார். "நிச்சயமாக இல்லை”, என்றார். "அப்போது அவரும் சுகமளிக்கிறவர் அல்ல. நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களென்றால் அது கிறிஸ்துவினாலேயே. நீங்கள் சுகத்தை பெற்றுக் கொண்டிருப்பீர்களென்றால் அது கிறிஸ்துவினாலேயே இரட்சிப்பை காண்பிக்கிறீர்கள். அதே போல் தான் சகோதரர் பிரான்ஹாம் செய்கிறார் மற்றும் சுகமடைவதற்கு பரிகாரத்தை (Atonment) நோக்கி காண்பிக்கிறார். இப்போது அதை நீங்கள் விவாதம் பண்ணுவீர்களென்றல் அதைச் சொல்லுங்கள் ஏனெனில் அது பரிகாரத்தில் (Atonment) உள்ளது". 32. பிறகு அவர், "அந்த சுகமளிக்கிறவரை கொண்டு வாருங்கள் அவர் யாரையாவது சுகப்படுத்துவதை நான் பார்க்கட்டும்", என்றார். மற்றும் அப்படி சொல்லிக் கொண்டிருந்தார். சகோதரர் பாஸ்வொர்த் சொன்னார், "சகோதரர் பிரான்ஹாம் ஜெபத்தில் தரித்து இருப்பவர். மக்களோடு தர்கம் செய்யமாட்டார். அவர் (விவாதத்தின் முடிவில்), *சகோதரர் பிரான்ஹாம், கட்டிடத்தில் உள்ளார். இங்கு வந்து அவர் இந்த கூட்டத்தை முடிக்கும்படி செய்யலாம். அவ்வாறு செய்யவில்லையென்றால், ஏன்? அவர் அப்படிச் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. இந்த கட்டிடத்தில் எங்கோ உள்ளார் என்பது எனக்குத் தெரியும்; கொஞ்ச நேரத்திற்கு முன் அவர்கள் உள்ளே வந்த போது நான் பார்த்தேன்", என்றார். 33. மேலும் நான் அங்கு அமர்ந்திருந்தேன். என்னுடைய சகோதரன் ஹாவர்ட், அநேகருக்கு ஹாவர்டை தெரியும். அவன் சரியான ஐரிஷ் மனிதன். அவன், "அப்படியே அமைதியாக உட்கார்", எனக்கு பின்னால் இரண்டு போலீஸ்காரர்கள் இருந்தார்கள். அவன் அந்த மாதிரி சொன்ன பிறகு ஏதோவொன்று சென்றது. (சகோதரர் பிரான்ஹாம் சுழலும் சத்தத்தை விவரித்து காண்பிக்கிறார்) நான் யோசித்தேன் ஓ,ஓ,ஓ,இல்லை இதுமட்டும் என்னால் கேட்க முடிந்தது, ஆனால் அதற்குத் தான் முதல் இடத்தை கொடுக்கவேண்டும்; அது மறுபடியுமாக கீழே வந்ததையும், போவதையும் நான் உணர்ந்தேன். (அந்த சத்தத்தை மறுபடியுமாக விவரித்தார்) ஏதோவொன்று என்னை எழுப்பியது. என் மனைவி அழத் தொடங்கினாள். நான், "அழாதே தேனே”, என்றேன். மற்றும் ஹாவர்ட், “உட்கார்”, என்றான். நான், "அது பரிசுத்த ஆவியானவர்", என்றேன். ஹாவர்ட் உடனே பின் வாங்கினான். 34. மக்கள் மேலே பார்த்தார்கள் மற்றும் அழத் தொடங்கினார்கள். மக்கள் என் மேல் விழுந்து அழுத்திக் கொண்டு, என்னையோ அல்லது என்னுடைய ஆடைகளையோ தொட முயற்சித்தார்கள். முன்னூறு அல்லது நானூறு உதவியாளர்கள், வேலியைப் போல் அவர்கள் கரங்களை இணைத்து கொண்டு தடுத்து நின்றார்கள். அந்த மக்களைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. என்னுடைய பிள்ளை வியாதிபட்டு மற்றும் மருத்துவர்களால் கைவிடப்பட்டு உதவி செய்ய ஏதோவொன்று இருக்கும் பட்சத்தில் நானும் கூட அது போல் தான் செய்ய முயற்சிப்பேன். எல்லோரையும் போல் நானும் ஒரு மனிதன் தான். இது போல் காட்சியைப் பார்க்கும்போது என் இருதயம் நொறுங்குகிறது. மேலும் மேடையை நோக்கி நான் நடந்து சென்றேன். திருவாளர் கிப்பெர்மென்... மற்றும் பலர் அவர்களுக்கு தேவையான படங்களை எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அதை விற்பதால் நான் செல்லும் கூட்டங்களில் பொதுவாக படம் எடுக்க அவர்களை அனுமதிப்பதில்லை. ஆகவே அவர், "இனி புகைப்படம் எடுக்கக்கூடாது", என்றார். சகோதரர் லிண்ட்சே மற்றும் சிலர் படங்களை எடுப்பதை விட்டுவிட்டு மக்களை பின்னாகப் போகச் சொன்னார்கள். 35. நான் நடந்து மேடைக்கு சென்று, "திருவாளர் பெஸ்டைக் குறித்து யாரும் கடினமாக எண்ணவேண்டாம்; கொரியாவில் இருப்பவர்கள் அதற்காக தான் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். நாம் அமெரிக்கர்கள் எதை வேண்டுமானாலும் விசுவாசிக்கலாம். அவருடைய கருத்துக்கு எனக்கு உடன்பாடு இல்லை. நிச்சயமாக இல்லை. ஒரு மனிதனாக அவரை ஏற்றுக்கொள்கிறேன்.என் தாய் என்னை நேசிப்பதுபோல் ஏதோ ஒரு தாய் அவரை நேசிக்கிறாள். அவர் மேல் கடினமான உணர்வு இல்லை. அவருடைய நம்பிக்கைக்கு அவருக்கு உரிமையுண்டு. எனினும் என்னுடைய இரட்சகரைக் குறித்த எண்ணம் உடையவனாக இருக்கிறேன். ஒருவிசை அவர் கண்கள் மீது கந்தத்துணியை போட்டு சுற்றினார்கள், அவர்கள் நினைத்தார்கள், அவருக்கு மனதை படிக்கும் அல்லது அது போல் ஒரு காரியம் உள்ளது என்று நினைத்து அவரை அடித்தனர்; அவர் தலையை ஒரு நாணலால் அடித்து, "இப்போது நீ ஒரு தீர்க்கதரிசியாக இருப்பாயென்றால் உன்னை யார் அடித்தார்கள் என்று தீர்க்கதரிசனம் உரை”, என்றார்கள். அது உங்களுக்கு நினைவு உள்ளதா? 'தீர்க்கதரிசனம் உரை'. அவர் யாருக்கும் வேடிக்கை காண்பிக்க அவர் கோமாளி அல்ல. பிதா என்ன காண்பித்தாரோ அதைச் செய்தார். ஆகவே அவர் கண்கள் மீது ஒரு கந்த துணியை போட்டு அவரை அடித்தார்கள். அவர்களால் ஒரு வல்லமையையும் உணரமுடியவில்லை. அவரும் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை. அவர் யாருக்கும் வேடிக்கை காட்டும் கோமாளி அல்ல'. 36. ஆகவே நான், "நான் ஒரு தெய்வீக சுகமளிக்கிறவர் என்று உரிமை கோரவில்லை, நான் வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்கிறவன் என்று உரிமை கோருகிறேன். மற்றும் ஓ, இந்த உலகத்தில் பிறக்கும்போது ஒரு தெய்வீக வரத்தோடு பிறந்தேன் என்று உரிமை கோருகிறேன். மற்றும் கர்த்தரின் தூதனானவர் வெளிச்சத்தின் ரூபமாக என்னிடத்தில் வருகிறார்", மேலும், "அநேக முறை என்னிடத்தில் வந்துள்ளது. கூட்டங்களில் வருகிறது. நான் உண்மையை சொல்லவேண்டுமென்றால், அது உண்மை தான். திருவாளர் பெஸ்ட் அல்லது வேறு மனிதன் யாரும் யாரையும் எவ்வாறு இரட்சிக்க முடியாதோ அதே போல் யாரையும் என்னால் சுகப்படுத்த முடியாது. ஆனால் பிரசங்கிப்பதற்காக அவர்கள் அனுப்பப்பட்டார்கள். நான் அந்த அளவுக்கு ஒரு பிரசங்கி அல்ல. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் இரட்சிக்கப்பட்டதை கண்டிருக்கிறேன். ஒரு பீட அழைப்பில் இரண்டாயிரம் நபர்கள் வந்தார்கள். ஆனால் அதைக் குறித்து நாம் இப்போது விவாதம் செய்யவில்லை, தெய்வீக சுகத்தைக் குறித்ததே! 37. மற்றும் நான், "ஒரு நபரின் இருதயத்தில் என்ன இருக்கிறது; என்ன செய்தார்; மற்றும் அவர்கள் ஜீவியத்தில் இருக்கும் காரியங்களை தேவன் எனக்கு தெறியப்படுத்தாமல் அவர்களால் இங்கு வரமுடியாது; பரத்தில் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட தெய்வீக வரம், அது என் தனிப்பட்ட காரியம், இந்த உலகத்தில் தேவன் என்னை கொண்டு வந்தபோது அவர் எனக்கு கொடுத்தார். உங்களுடைய பாவங்கள் மற்ற காரியங்களை மறைக்கமுடியாது. மேலும் உங்கள் இருதயத்தில் மற்றும் உங்கள் சிந்தையில் உள்ள எண்ணங்களை மறைக்க முடியாது. மற்றும் உங்கள் ஜீவியத்தில் நீங்கள் செய்த எல்லாவற்றையும் மற்றும் உங்கள் வாழ்கையில் நீங்கள் என்ன செய்திருந்தாலும், அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும், அவற்றை நீங்கள் என்னிடத்தில் சொல்லாமல் இருக்க முடியாது. எனினும் உங்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டே இருக்கலாம். நீங்களும் நானும் வயதாகி நரைத்த முடியோடு ஆகும்வரையும், பற்கள் வலியோடு இருக்கலாம். நீங்கள் இயேசுவை உங்கள் சுகமளிக்கிறவர் என்று ஏற்றுகொள்ளும்வரை அது அங்கேயே இருக்கும். ஏனெனில், சுகம் மற்றும்... தேவன் சர்வ வல்லமையுள்ளவராக இருக்கிறார்", என்று நான் சொன்னேன். 38. மேலும், "நான் சத்தியத்தை சொல்லுவேனென்றால், தூதனை குறித்து சொல்லுகிறேன். நான் உண்மையைச் சொல்லுவேனென்றால் உண்மையைச் சொன்னேன் என்று தேவன் நிரூபணம் செய்வார். இயேசு யூதரிடத்தில், சொன்னதுபோல் யோவான் செய்த கிரியைகளை விட மகத்தான காரியங்கள் எனக்கு உண்டு. இக்காரியங்களை செய்வதற்கு பிதா என்னை அனுப்பியுள்ளார். நான் தேவனிடத்திலிருந்து வந்தேனென்று அக்காரியங்களே நிரூபணம் செய்கிறது என்றார். அவர் நிரூபணம் செய்யவில்லையென்றால் அப்போது நான் தவறாக உள்ளேன்; மற்றும் அவர் நிரூபணம் செய்வாரென்றால் அப்போது நான் சரியாக இருக்கிறேன். அது நான் என்பதற்காக அல்ல, ஆனால் என்னை அனுப்பியவர் அவர் சரியாக இருக்கிறார், தேவன் பிழையோடு எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்ளமாட்டார் என்று எவரும் அறிவார். மற்றும் நான் உண்மையை சொல்லுவேனென்றால் தேவன் எனக்காகப் பேசுவார். 39. ஓ, அதை நான் எப்போதுமே மறக்கமாட்டேன். அச்சமயத்தில் வானங்கள் தளர்ந்து, அவர் இங்கே வந்தார். எனக்கு மேலாக வந்து போகிறார். (சகோதரர் பிரான்ஹாம் சுழல்கிற சத்தத்தை செய்து காண்பித்தார்.) எல்லோரும் நிசப்தமாக இருந்தார்கள். மற்றும் திருவாளர் பெஸ்டுக்காக புகைப்படம் எடுத்து கொண்டிருந்தவர், புகைப்படக்காரர் என்ன செய்கிறார் என்று அவர் அறிவதற்குள் முன்னாக வந்து அவரே அந்த காட்சியை புகைப்படம் எடுத்தார். தேவனே அதை நிரூபணம் செய்தார். அதற்கு மேல் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான், "நன்றி பிதாவே" என்று சொல்லி மேடையை விட்டு நடந்து சென்றேன். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இந்த மனிதன் (புகைப்படக்காரர்) வீட்டிற்கு சென்ற பின்... திருவாளர் கிப்பெர்மேன் ஒரு வைதீகமான யூதன், திருவாளர் அயெர்ஸ் ஒரு ரோமன்கத்தோலிக்கர். நான் ஒரு மனோதத்துவர் என்றும், ஸ்திரீயை நான் மனோவசியம் செய்ததினால் (Hypnotizer) தொண்டையிலிருந்து கட்டி கீழே விழுந்ததாக, முந்தைய நூள் செய்தித்தாளில் இவ்வாறு எழுதியிருந்தார். மற்றும் வெளியூரில் ஒரு வாலிப சிப்பாய், அவர் பின்புறத்தில் முதுகெலும்பில் முடக்கம் இருந்தது. அவர் அங்கு படுத்திருந்த போது அவருக்கு என்ன பிரச்சனை என்று சொல்லி, அவரை எழும்பி நடக்கச் சொன்னேன். முடக்கத்தோடு அவர் அங்கு படுத்திருந்தார், அவர் எழும்பி நடந்து சென்றார்; முடக்கத்தோடு இருந்த அந்த மனிதன் சுகம் பெற்றும், மயக்கத்தில் இருந்த அந்த மனிதனை நான் எழுப்பினதாக சொல்லி, நான் செய்த பல காரியங்களை கேலியாக சித்தரித்து பத்திரிகை தாளில் எழுதியிருந்தார். அவர் அன்றைக்கு வீட்டிற்கு செல்கையில், "அதைக் குறித்து என்னை நினைக்கிறாய் டெட்", என்றார். டெட், "எனக்கு தெரியவில்லை”, என்றார். 40. திருவாளர் அயெர்ஸ், "நான் ஒரு கத்தோலிக்கன், இக்காரியங்களை நம்புவதற்கு நான் போதிக்கப்பட்டிருக்கி றேன். ஆனால் கத்தோலிக்க சபையின் மூலமாக தான் வரவேண்டும். அது உண்மையாக இருக்குமானால்... அசலாக இருக்குமானால்; அவர் கத்தோலிக்க சபையை சார்ந்தவராக தான் இருப்பார்”, என்றார். அநேகர்... என்னுடைய முன்னோர்கள் கத்தோலிக்கராக இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது கத்தோலிக்கராகிய உங்களுக்கு போதிக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள். அப்படியாகவே இயேசு ஆலயத்திற்கு தான் வருவாரென்று யூதர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தேவன் எங்கு போகச் சொன்னாரோ, அங்கு சென்றார். தேவன் காரியங்களை புதிராக செய்கிறார். அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறப்பார் என்று நீங்கள் யோசித்து பார்த்திருக்கமாட்டீர்கள். ஆனால் அவ்வாறு அவர் பிறந்தார். ஆகவே, இப்பொழுது அவர்கள் உள்ளே சென்றார்கள், "திருவாளர் பெஸ்ட்க்கு இந்த புகைப்படங்களை ஆயத்தம் செய்து கொடுப்போம்", என்றார். மற்றும் அதற்குண்டான திராவகத்தில் போட்டார்கள். ஆறு புகைப்படங்களை திருவாளர் பெஸ்ட்க்கு கொடுப்பதற்காக திராவகத்தில் போட்டார்கள். அதில் ஒன்று சரியாக இல்லை, ஆனால் அதையும் அந்த திராவகத்தில் போட்டார். 41. திருவாளர் கிப்பெர்மேன் உறங்குவதற்காக மாடிக்கு சென்றார். திருவாளர் பெஸ்ட் அல்ல, திருவாளர் அயெர்ஸ் அமர்ந்து புகை பிடித்து கொண்டிருந்தார். பிறகு சிறிது நேரம் கழித்து அவைகளை திராவகத்திலிருந்து எடுத்தார். முதலாவது வெறுமையாக இருந்தது. இரண்டாவது வெறுமையாக இருந்தது. ஆறு புகைப்படங்களையும் எடுத்தார்; எல்லாமே வெறுமையாக இருந்தது. அதற்கு பிறகு அடுத்ததை எடுத்தபோது அதில் கர்த்தரின் தூதனானவர் அந்த புகைப்படத்தில் இருந்தார். அவருக்கு மாரடைப்பு வருவது போல் இருந்தது. நான் தங்கி இருக்கும் ரைஸ் விடுதிக்கு அவரை கொண்டு வர இருந்தார்கள். அங்கு கதவுக்கு பாதுகாவலர்கள் இருந்தனர். அவர் உள்ளே வர அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. 42. அதற்கு பிறகு துரிதமாக அதைப் பற்றி குறிப்பிட்டு அங்கு அனுப்பினார்கள், இரவு பதினோரு மணியளவில் வாஷிங்டன் டிசி-க்கு அதை அனுப்பிவைத்து பதிப்புரிமை செய்தார்கள். பிறகு ஹூஸ்டனுக்கு திரும்ப அனுப்பி வைத்தார்கள். மற்றும் ஜார்ஜ் ஜே லேசியிடத்திற்குக் கொடுக்கப்பட்டது. அமெரிக்கா ஐக்கிய தேசத்தின் சிறந்த ஆய்வாளர் முன்னால் (FBI) ஏப். பி. ஐ-ல் பணிபுரிந்தவராகிய ஜார்ஜ் லேசி அவர் கரங்களில் அந்த புகைப்படம் கொடுக்கப்பட்டது. அவர் அதை வைத்துக் கொண்டார். இப்போது மிகவும் கடினமான மனிதன்; அவர் அதை வைத்து கொண்டு சொன்னார் ஒரு நிமிடம் பொறுங்கள் அதை நான் ஆராயட்டும். அதை ஆராய்வதற்கு அந்த ஷெல் கட்டிடத்திற்கு எடுத்து சென்றார். ஷெல் கட்டிடம் ஆராய்வதற்கும் மற்றும் ஆவணம் செய்வதற்கான இடம். கலிபோர்னியாவில் இருந்து ஒரு ஐந்து லட்சம் டாலர் கேஸ்களை முடித்துவிட்டு வந்திருந்தார். அங்கு அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள். அவர் அந்த புகைப்படத்தை இரண்டு நாள் வைத்திருந்து, பிறகு அவர் இப்படியாக கூறினார், இதை பற்றிய கருத்தை நாங்கள் நாளை மூன்றாவது நாள் மதியம் இரண்டு மணியளவில் கூறுவோம் என்றார். அநேக புகைப்படக்காரர்கள் அங்கு கூடினார்கள். பட்டணத்தை சுற்றி இருந்த அநேக மக்களும், காலியேர்ஸ் பத்திரிகையாளர்களும் மற்றும் டைம்ஸ் பத்திரிகையாளர்களும் அங்கு கூடியிருந்தார்கள். 43. அவர் முகம் சிவந்த வண்ணமாக இருக்கும். மிகவும் கோபக்காரர். அவர் மிகவும் கிண்டலாக வெளியே வந்தபோது, அவரை நான் பார்த்தேன். அவருடைய முகம் மென்மையானது போல் இருந்தது. அவர், "யாருடைய பெயர், சங்கை. பிரான்ஹாம்?", என்றார். நான், "என்னுடையது ஐயா", என்றேன். அவர், “எழும்பி நில்லுங்கள்”, என்றார். நான் எழும்பி நின்றேன். அவர், "சங்கை பிரான்ஹாம் இந்நாட்களில் ஒரு நாளில் மரணத்துக்குரிய எல்லா மனிதர்களைப் போலவே நீங்களும் ஜீவனுடைய காட்சிகளை விட்டு கடந்து போவீர்கள்", என்று சொன்னார். அதற்கு நான், “அதை அறிந்திருக்கிறேன்", என்றேன். அவர் சொன்னார், "கிறிஸ்துவ மக்கள் குடியிருக்கும்வரை உங்களுடைய புகைப்படம் மரிக்காது; உலக வரலாற்றில் இது தான் முதன் முறையாக ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவனின் புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. என் சிந்தையில் எனக்கு தெரிந்த எல்லா சோதனையிலும் அதை சேர்த்தேன். அது ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவனின் புகைப்படம் எடுக்கப்பட்டது. என் எண்ணங்களைச் சொல்ல வேண்டுமென்றால் உங்கள் கூட்டங்களில் கேட்டிருக்கிறேன். பத்திரிகையிலும் படித்திருக்கிறேன். தூதனைக் குறித்து கேள்விப்பட்டிருந்தேன்; மற்றும் பல காரியங்களை அறிந்திருந்தேன். எனக்குள் நான் நினைத்ததுண்டு, இந்த புகைப்படத்தின் நெகடிவ் கிடைத்தபோது, இது மனோதத்துவம் என்று எனக்குள் நான் கூறிக் கொண்டேன். சகோதரர் பிரான்ஹாம் கேமராவின் இயந்திரத்தின் கண் இந்த மனோதத்துவம் போன்ற புகைப்படத்தை எடுக்காது. அந்த புகைப்படத்தின் நெகடிவ் வில் அந்த வெளிச்சம் பட்டது”, என்று அவர் சொன்னார். 44. மேலும் அவர், "என் தாயார் ஒரு கிறிஸ்தவள், நானும் அவ்வாறு என்று எண்ணினேன், தேவன் என் மீது இரக்கமாக இருப்பாராக, முன்னே வாருங்கள்”, என்றார். எல்லோரும் அழத் தொடங்கினார்கள். அவர், "சகோதரர் பிரான்ஹாம், ஒரு மாயமாலக்காரர். (அவர் ஒரு அவிசுவாசி என்ற அர்த்தத்தில் ஒரு சமயம் சொன்னார்.) இயற்கைக்கு மேம்பட்ட ஜீவனை குறித்து விஞ்ஞானப்படி எந்த அத்தாட்சியும் கிடையாது; அந்த நாட்கள் இப்போது கடந்து சென்றது என்று சொன்னார். ஆனால், அவர் கையில் அந்த புகைப்படத்தின் நெகடிவ்வை வைத்திருந்தார். அந்த நாட்கள் இப்போது கடந்துபோய்விட்டது. மற்றும் இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் இருக்கிறது என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபணமானது. திருவாளர். பிரான்ஹாம் இதை உங்களிடத்தில் ஒப்படைக்கிறேன்", என்றார். 45. "அது என்னுடயது அல்ல ஐயா", என்றேன். அவர் சொன்னார்,ஓ,ஒரு நிமிடம் பொறுங்கள் அந்த புகைப்படத்தின் நெகடிவ் ஒரு லட்சம் டாலர் மதிப்புடையது...”, அதற்கு நான், “அது எனக்கு அப்படியாக இருந்தால், அது என் ஜீவனின் மதிப்பாக இருக்கிறது”, என்றேன். அவர், "சகோதரர் பிரான்ஹாம் இதை அறிந்திருக்கிறீர்களா? அது... அந்த புகைப்படம் அதன் நிஜமான மதிப்பு வரும் நாளைக் காணும்படி நீங்கள் ஜீவனோடு இருக்கமாட்டீர்கள். ஏனெனில் சொத்து உரிமையைக் காண, (உயில்) அதை எழுதி வைத்தவர் இறந்துவிடுவார். நீங்கள் கடந்து சென்றபின் அந்த நாட்கள் வரும். இப்போது அது என்னவென்று நீங்கள் உணர்கிறீர்களா?", என்றார். அதற்கு நான், "அமெரிக்க புகைப்படக்காரர்கள் குழுமத்திற்கு அது சொந்தமானது ஐயா", என்றேன். "இயேசு கிறிஸ்து, என்னுடைய கர்த்தராக இருந்தால் அதுவே எனக்கு போதுமானது", என்று நினைத்தேன். நான் யுத்தத்தில் இருந்ததினால் அவர் என்னிடத்தில் இறங்கி வந்து உலக சரித்திரத்திலே முதல் முறையாக என்னோடு புகைப்படம் எடுத்து கொண்டார், அவரை நான் மிகவும் நேசிப்பதால், இதை நான் வியாபாரம் செய்யமாட்டேன்", என்றேன். இந்த புகைப்படத்தோடு நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. 46.ஆகவே, நீங்கள் எங்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் போட சம்மதிப்பீர்களா என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டார்கள். வழக்கறிஞர்களும் மற்றும் மற்றவர்களும் அங்கு இருந்தார்கள். அந்த ஸ்டூடியோவிற்கென்று இருக்கும் வழக்கறிஞர்களும் அங்கு இருந்தார்கள். அதற்கு நான், "எந்த ஒரு காகிதத்திலும் நான் கையெழுத்து போடமாட்டேன். ஆனால் நீங்களும் மற்றும் திருவாளர் கிப்பெர்மேனுக்கும் விருப்பமிருந்தால் விற்கலாம். குறைவான விலையை வையுங்கள். அப்போது ஒவ்வொரு நபரும், ஏழையான மக்களும் அதை பெற்றுக் கொள்ளமுடியும். பாருங்கள் இன்னொரு காரியத்தை நீங்கள் செய்ய வேண்டும். அது என்னவென்றால் அந்த புகைப்படத்தின் புனிதத் தன்மையை காத்துக் கொள்ளுங்கள், திருவாளர் லேசி அவர்களே நீங்கள் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடுங்கள்; ஏனெனில் அப்போது தான் குறைகூறுபவர்கள் அதை பார்க்கும்போது அவர்கள் வாயை மூடிக்கொள்வார்கள். அந்த ஆவணத்தில் நீங்கள் கையெழுத்திடுங்கள். மேலும் உங்களுக்கும் மற்றும் திருவளர் கிப்பெர்மேனுக்கும் ஒப்பந்தப்படி அதை விற்க அதிகாரம் உண்டல்லவா என்று நான் அவர்களைக் கேட்டேன். நான் எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இடமட்டேன். ஆனால் உங்களுக்கு விற்க அதிகாரம் உண்டு. அதுவும் மலிவான விலையில்; அப்போது மக்களால் வாங்கமுடியும். மேலும் அமெரிக்காவின் மிகச் சிறந்தவர்களில் ஒருவரான திருவாளர் லேசியின் எழுதப்பட்ட அறிக்கையும், அவருடைய கையெழுத்தில்லாமல் எந்த புகைப்படமும் வெளியே போகாது", என்று நான் சொன்னேன். அந்த புகைப்படம் தான் இந்த உலகில் மிகச் சிறந்தது; என்று நான் எண்ணினேன். அதற்கு அவர், "அதை நான் செய்கிறேன்”, என்றார். மேலும் அதைக் குறித்து அவர் செய்ததை எழுதினார்; அந்த அரங்கத்திற்குச் சென்று அங்கு கேமராவின் மேல் வெளிச்சமானது இரண்டு முறை பட்டதா என்றும், மற்றும் அங்கு அந்த பெரிய அக்கினி ஸ்தம்பமானது சுழல் காற்று போல் சுழன்று, சுழன்று, சுழன்று கொண்டு அவர் தலைமேலாக அது அமர்ந்தபடி இருந்ததா என்று ஆராய்ந்து பார்த்தார். 47. அவர், "சகோதரர் பிரான்ஹாம், அந்த புகைப்பட நெகடிவ்வை அல்ட்ரா கதிர் (புறஊதா. கதிர்) ஊடாகவும், மற்றதையும் வைத்துப் பார்த்தபோது அது பார்ப்பதற்கு ஒருவகையான மஞ்சளும், பச்சை நிறமும் கலந்து எரியும் அக்கினி ஜுவாலையை போல இருந்தது”, என்றார். அதற்கு நான், "அப்படியாகத்தான் அது இருக்கிறது", என்றேன். அங்கு இருக்கும் மக்களும் அதைப் பார்த்தார்கள். நான் வேத வசனத்தை படிக்கையில் நான் எண்ணுகிற கருத்தை சொல்லுகிறேன். முதலாவதாக அந்த படம் இங்கு உள்ளது. அதை உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்.சில சமயம் திருவாளர் கிப்பெர்மேன் கூட்டத்தில் அதை விற்கிறார். ஆனால் மக்களிடத்தில் அதற்கு அதிகமான பணத்தை எடுக்கிறாரென்று தெரிந்தபிறகு, அதைக் கூட்டத்தில் விற்க நான் அனுமதிக்க வில்லை. ஏனெனில் அந்த படம் முப்பது அல்லது நாற்பது சென்டுக்கு மேல் அல்லது அதிகபட்சம் ஐம்பது சென்டுக்கு மேல் விலையாகாது, அதை ஒன்னேகால் டாலருக்கு விற்பது மிகவும் அதிகமானது. ஆகவே பின்னால் இருப்பவர்களுக்கு தெரிகிறதா? 48. இப்போது இரவு நேரக்கூட்டங்களில் இங்கு நடக்கும் காரியங்களை நீங்கள் பார்க்கும்போது, அது நான் அல்ல. இங்கிருக்கிறவர் தான் அதைச் செய்கிறார். பின்னால் இருப்பவர்கள் எத்தனை பேருக்கு தெரிகிறது? உங்கள் கரங்களை உயர்த்துங்கள்? என்னுடைய மகனை, பின்னாக இருக்கும் அந்த பலகை மேல் வைத்துக் காண்பிக்கச் சொல்லுகிறேன். மற்றும் இங்கு இருப்பவர்கள் கூட திருவாளர் லேசியின் கூற்றை நீங்கள் படிக்க வேண்டுமானால், இதோ அது இங்கு இருக்கிறது; நீங்கள் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். என்னுடைய புத்தகத்தில் ஒரு நகல் உள்ளது, ஆனால் அவர்கள் என்னுடைய புத்தகத்தில் அதை அச்சடிக்க ஸ்டூடியோகாரர்கள் அனுமதிக்கவில்லை. இதை மட்டுமே பெற்றுக் கொள்ளும்படி அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இது பதிப்புரிமை செய்யப்பட்டது. பின்பாக பலகையில் என் மகன் வைத்துள்ள புகைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களா? மேலும் நீங்கள் அதை தொடக்கூடாது? புரிந்ததா? ஏனென்றால் அது பதிப்புரிமை செய்யப்பட்டது. மற்றும் அதை அவர்கள் டி. சி. - வாஷிங்டனில் வைத்திருக்கிறார்கள். அது தான் இயற்க்கைக்கு மேம்பட்ட நபரின் முதல் புகைப்படமாக இருப்பதால், அதில் ஒரு நகலை டி. சி. வாஷிங்டனில் உள்ள ரிலிஜியஸ் ஹால் ஆப் ஆர்ட்-ல் வைத்திருக்கிறார்கள். (மதங்களுக்கான கலைக்கூடம், வாஷிங்டன் டி.சி) 49. நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா, நண்பர்களே? அந்த காரியம் இதில் இருக்கிறது. யாத்திராகமம் 13:21. அவர்களை இரவும் பகலும் வழி நடத்தும்படிக்கு கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும் (மேகஸ்தம்பம்) இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும்; இரவிலே அக்கினி ஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை. இயற்கையின் ரீதியாக இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டுவந்த வண்ணமாக, வாக்குத்தத்த பூமிக்கு வழிநடத்தி சென்ற அதே கர்த்தரின் தூதனானவர் இன்றைய நாளில் ஆவிக்குரிய ரீதியில் வாக்குத்தத்த பூமிக்கு, நம்மை வழிநடத்துகிறார் என்று மிகுந்த பயபக்தியோடும், மற்றும் உத்தம இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன்."என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; நான் சென்று ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணுவேன்". மேலும் இன்றைக்கு சபையை கர்த்தரின் தூதனானவர் வழிநடத்துகிறார் என்றும் மற்றும் அது அதே பரிசுத்த ஆவியானவர் என்று நான் நம்புகிறேன்.உடன்படிக்கையின் தூதன் கிறிஸ்துவென்று எனக்கு மட்டும் அல்ல நண்பனே, இதை எல்லோரும் அறிவார்கள். இதை அறிந்த நபர்களோடு என்னையும் சேர்த்துக்கொள்ளலாம், ஏனென்றால் கர்த்தருடைய தூதனானவர் எனக்கு மட்டுமல்ல. அவர் உங்கள் அனைவருக்கும்; மேலும், அவர் சரியாக இப்பொழுது இங்கு இருக்கிறார்.சரியாக இந்த கட்டிடத்தில் இருக்கிறார். அதை சரியாக இப்பொழுதே நான் உணர்ந்தேன். மற்றும் அந்த தூதனை நான் அறிவேன்... இங்கு நான் பேசிக்கொண்டிருக்கிற அதே தூதன் இப்போது என்னிடத்தில் இருந்து ஐந்து அடி தூரத்திலும் அல்ல, இப்பொழுதே சரியாக என் அருகில் இருக்கிறார். மற்றும் நியாயத்தீர்ப்பில் என்னை அழைக்கும்போது, இந்த இரவு நேரத்தில் எந்த காரியத்தை குறித்து பேசினேனோ, அதை நியாயத்தீர்ப்பில் நான் உங்களை சந்திக்கும்போது, நான் உண்மையை மட்டும் தான் சொன்னேன் என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் அறிவீர்கள். அவர் இப்பொழுது சரியாக இங்கே இருக்கிறார். 50. மேலும் என் ஜீவியத்தில் இது தான் கடைசியான ஆராதனையாக இருக்குமானால், என்னுடைய வார்த்தைகள் உண்மையானது. ஏனெனில் என்னை குறித்து நான் சாட்சி சொல்லவில்லை; இயேசு கிறிஸ்துவை குறித்தே சாட்சி சொன்னேன். மேலும் உலகம், சபை உலகம், இதை பார்த்துக் கொண்டிருக்கிறவர்கள், அது செயல்படுகிற விதத்தைக் காணும்போது அது சத்தியம் என்று அறிந்து நம்புகிறார்கள். இப்போது இதைக் குறித்து விஞ்ஞான உலகம் எந்த ஒரு சாக்குபோக்கு வார்த்தைகள் சொல்ல முடியாது. ஏனென்றால், விஞ்ஞான உலகத்திற்கு விஞ்ஞானத்தின்படி நிரூபிக்கப்பட்டது. அதை குறித்து எதுவும் பரவலாக பேசப்பட்டு பார்க்கவில்லையே", என்று நீங்கள் சொல்லலாம். இல்லை ஐயா. லுக், லைப், டைம்ஸ், அல்லது எந்த பத்திரிகைக்கும் அதை கொடுக்க மறுத்துவிட்டார்கள். எல்லோரும் அதை கேட்டார்கள்; ஆனால் அவர்கள் தரவில்லை; அவர்கள் சொன்னார்கள் அதை பத்திரிகையில் போட்டால்... ஏனென்றால் உங்களுக்கு யூதனைப் பற்றித் தெரியும். எல்லோரும் அவ்வாறு இல்லை. ஆனால் அதில் சிலர் அதை பணமாக்க நினைக்கிறார்கள். அப்படி போட்டால் வெட்டிவிடுவார்கள் என்று சொன்னார்கள். அதை விற்பதற்காக அவர்கள் எதிர்பார்த்தார்கள், மற்றும் அதை ஆயிரம் ஆயிரமாய் எல்லா இடத்திலும் கண்டிப்பாக விற்பார்கள். ஆகவே அந்த காரியத்தோடு எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 51. எனினும் இந்த ஒரு காரியம் மட்டுமே, அது என்னவென்றால், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து வார்த்தையிலும், மற்றும் கிருபையிலும், இராஜாதிபத்தியம் உடையவராக நான் சொன்னதை உண்மை என்று நிரூபித்தால் இந்த இரவுப்பொழுதில் நான் சந்தோஷப்படுகிறேன். மற்றும் நான் உண்மையை உங்களுக்கு சொன்னேன்; அதை விசுவாசிப்பது உங்களை பொருத்தது, அது அப்படி தான். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக என்பது என்னுடைய ஜெபமாக இருக்கிறது. மன்னிக்கவும்... அம்மையாரே (சீமாட்டி ஏதோவொன்றை சகோதரர் பிரான்ஹாமிற்கு சொல்கிறார், இப்பொழுது நாம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லுவோமாக. சபையோர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்கிறார்கள்). அது... ஓ, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! சகோதரியே. பிறகு சத்தியம் என்னவென்று உங்களுக்கு தெரியும்; அப்படித்தானே சகோதரியே? அது சத்தியம். அந்த புகைப்படம் எடுக்கும்போது வேறு யாராவது ஹூஸ்டனில் அங்கு இருந்தீர்களா? அந்த படம் எடுக்கும்போது இங்கு நிற்கும் அந்த மனிதன் இருந்தார். அதோ அங்கு ஒருவர், வேறு ஒருவர், அங்கே, அங்கே, ஒருவர். எல்லோரும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லுவோம். இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்பட வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது; அது சரிதானே. 52. இப்போது நண்பர்களே, இந்த குறுகிய நேரத்தில் நாங்கள் இந்த இடத்தில் இருக்கையில், ஒருவேளை இப்படி இருந்திருக்கலாம், அல்லது அப்படி இருந்திருக்கலாம் அல்லது வேறு விதமாக இருக்கலாம் என்ற எல்லா அற்பமான எண்ணங்களையும் நாம் எல்லோரும் தள்ளி வைப்போமாக.நாம் கர்த்தராகிய இயேசுவுக்காக மிகவும் •நன்றி செலுத்துகிறோம் என்று நாம் சொல்வோமாக. இந்த பட்டினத்தில் நாங்கள் இருக்கும் இந்த சிறிது நேரத்தில் ஒரு கோழி தன் குஞ்சுகளை மழையில் இருந்து எப்படி அதன் மேல் அமர்ந்து அடைகாக்கிறதோ, அது போல் நாம் ஒன்றாக கூடி இருப்போம். மற்றும் நாமெல்லோரும், அவர் அன்பில் நாம் அடைக்கலம் அடையலாம், அதில் இந்த சக்கர நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள், மற்றும் இருதய நோயினால், மற்றும் புற்று நோயினால் மற்றும் அநேக நோயினால் பாதிக்கப்படும் இந்த மக்கள் மரிப்பதில்லை. அவர்கள் ஜீவிப்பார்கள்.நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்கள் விசுவாசம் தான் தெய்வீக சுகத்தை செயல்படச் செய்கிறது. ஆகவே நான் சொன்னபடியாக, இதற்குப் பிறகு மக்கள் மத்தியில் என்னை நீங்கள் காண முடியவில்லையென்றால், இன்றிரவு என் ஜீவனை சர்வ வல்லமையுள்ள தேவன் எடுத்துக் கொள்வாரென்றால், அவர் தாமே, இந்த ஆவிக்குரிய உலகிற்கு அவிசுவாசிகளுக்கும், விசுவாசிகளுக்கும், தன்னைத் தானே நிரூபித்துள்ளார். அது உண்மையென்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களைக் காணட்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையாக இருக்கிறது. இப்போது உங்களுடைய நேரத்தை அதிகமாக எடுத்துவிட்டேன். மகனே இப்போது இங்கு வந்து அந்த புகைப்படத்தை எடுத்துக்கொள். அவர்கள் அதை பின்னால் இருக்கும் இடத்தில் வைப்பார்கள். மன்னிக்கவும், இதை விற்க எங்களிடம் வேறு பிரதிகள் இல்லை.எங்களை மன்னியுங்கள். அதனால் அதை நீங்கள் சென்று பார்க்கலாம். மற்றும் படிக்கலாம். அதனால் ஒரு பிரச்சனையில்லை. இப்போது நாம் தலைகளைத் தாழ்த்தலாம். 53. ஓ, பிதாவே இவ்வளவு மணி நேரம் எடுத்துக்கொள்ள நான் எண்ணவில்லை. கர்த்தாவே, உங்களைக் குறித்து நான் பேசுகையில், உங்களை மிகவுமாக நேசிக்கிறேன்... அது என் இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது. தேவனே, உம்மைப் பற்றி ஓர் இரவு முழுவதும் பவுல் பிரசங்கித்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வாலிபன் ஜன்னல் விளிம்பிலிருந்து கீழே விழுந்து, மரித்த காரியம் எனக்கு நினைவுக்கு வருகிறது. மற்றும் பவுல் சென்று அவன் மீது விழுந்து, அவனுடைய சரீரத்தை அவன் மீது வைத்தான். ஏனெனில் அவன் அபிஷேகத்தில் இருப்பதை அறிந்தான். புயலான கடலில் அவனோடு இருந்த அதே கர்த்தரின் தூதனானவர் அவனோடு இருக்கிறார் என்று பவுல் அறிந்ததினால், அந்த வாலிபனின் ஜீவன் அவனுக்குள் திரும்பியது, மேலும், "நீ நலமாக இருப்பாய்", என்று அவன் சொன்னான். அவன் நலமானான். தேவனே, பவுல் உம்மை மிகவும் நேசித்தார் என்று நான் எண்ணுகிறேன்; பவுலுடைய ஜீவனை எடுக்க அவர்கள் சாரக்கட்டு கட்டும் போது, "நல்ல போராட்டத்தைப் போராடினேன்; ஓட்டத்தை முடித்தேன்; விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்... இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது; நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்”, என்று பவுல் கூறினார். 54. அன்புள்ள பிதாவே, இந்த இரவுப்பொழுதில் இரக்கத்தின் பேராக இந்த கூட்டத்தினர் மீது உங்கள் கிருபையை பொழியும்படி நான் கேட்கிறேன். எல்லோரையும் ஆசீர்வதியும் கர்த்தாவே. மற்றும் ஓ, பரிசுத்தமுள்ள தேவனே ஜீவனின் ஆக்கியோனே, மற்றும் எல்லா நன்மையான ஈவுகளையும் தருபவரே, எனக்கு எனக்கு தெரிந்தவரை சிறந்த விதத்தில் சாட்சியை பகிர முயற்சித்தேன். நீங்கள் உமக்காக எடுத்துக் கொண்ட உம்முடைய புகைப்படம் இங்கே எங்களோடு இருப்பதற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன். அதை நோக்கி பார்க்கும்போதும், எண்ணும்போதும் என் இருதயம் நடுங்குகிறது. "எனக்கு ஐயோ, கர்த்தரின் தூதனானவர் என் அருகாமையில் நின்றார்", மேலும் தத்ரூபமாக உலகம் முழுவதும் உங்கள் வார்த்தையை நிரூபித்திருக்கிறீர். ஆயிரக்கணக்கான ஆயிரம், ஆயிரம் மக்கள் களிகூருகிறார்கள். விஞ்ஞான உலகம் அதைப் பார்க்கிறது. ஆனால் அதை அவர்கள் மறைக்கிறார்கள், அதற்கு மேல் அது வளர விடக் கூடாது என்று எண்ணுகிறார்கள். அப்படியாகத்தான் நீர் இருந்த நாட்களிலும் அது இருந்தது; ஆயினும் நீதியின் நிமித்தம் எவர்கள் பசியோடும், தாகத்தோடும், இருப்பார்களோ அவர்கள் நிரப்பப்படுவார்கள். மற்றும் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணும்படி எவர்கள் முன்குறிக்கப்பட்டார்களோ, அவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காண்பார்கள், "எந்த மனிதனும் பிதாவினிடத்தில் வரமாட்டான்... அல்லது பிதாவானவர் இழுத்துக் கொள்ளாமல் என்னிடத்தில் ஒருவனும் வரான்". மேலும் கர்த்தாவே விசுவாசிப்பவர்கள் இங்கு உள்ளார்கள். இந்த இரவுப்பொழுதில் கிறிஸ்துவின் அன்பின் கயிற்றினால் எங்களை ஒன்றுகூட்டி கட்டும்படியாகவும், மற்றும் இந்த கட்டிட முழுவதும் உள்ள மக்கள் குணமடைய உம்முடைய பரிசுத்த கரங்களை நீட்டும்படியாகவும் நான் பிதாவினிடத்தில் ஜெபிக்கிறேன். 55. மற்றும் இந்த மாலைப்பொழுது முடிவு பெறும் தருவாயில், வல்லமையான தேவன், ஜீவனின் ஆக்கியோன் மற்றும் எல்லா ஈவுகளையும் கொடுக்கிறவர், என்னுடைய கடல் பயணத்திற்கு முன்பாக அமெரிக்காவில் இங்கு இன்னும் இரண்டு கூட்டங்கள் நடைபெறுவதாக இருக்கிறது. மற்றும் கர்த்தாவே தயவுசெய்து உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய கண்களில் தயவு என் மீது இருக்குமானால், இந்த இரவு கூட்டம் மகத்தானதாக இருக்கட்டும். இந்த வெப்பமான கட்டிடத்தில் மக்கள் அதிக நேரம் காத்திருக்கிறார்கள். ஆனால் இந்த இரவுப்பொழுது ஏதோவொன்று வித்தியாசமானதாக நடக்கட்டும். குருடர்கள் பார்க்கட்டும், அல்லது செவிடர்கள் கேட்கட்டும், அல்லது முடவர்கள் இந்த இரவில் நடக்கட்டும். ஏதோ ஒரு மகத்தான காரியம் இங்கு நடக்கட்டும். மற்றும் பரிசுத்த ஆவியானவர் அருகாமையில் நின்று, பாவத்தை வெளியேற்றி, அநீதியான காரியங்களை கடிந்து கொண்டு, மற்றும் பலவீனமான ஒரு மனிதன் இதை விசுவாசிக்கும்படியாக, அவனுடைய விசுவாசத்தை நேராக்குவாராக. 56. மற்றும் கர்த்தாவே இங்கு நீர் கிரியை செய்கையில் நான் சாட்சி கொடுத்தது போல என்னை நிரூபியும். கர்த்தாவே, இந்த இரவுப்பொழுதில் அப்படி செய்வீரா? மற்றும் உங்கள் ஆவி வந்து, நீங்கள் இங்கு இருப்பதை நிரூபிக்கட்டும். ஒவ்வொரு நபரும் உம்மை காண்பாராக. மேலும் இந்த மேடையில் உமது அருமையான நடத்துதலின்படி இந்த கூட்டத்தினர் மத்தியில் அசைவாடி மக்களுக்குள் இருக்கும் காரியங்களை வெளிப்படுத்தி காண்பிப்பாராக. கர்த்தாவே, இந்த இரவுப்பொழுதில் இங்கு ஜெப வரிசையில் வராமல் வெளியில் அமர்ந்திருக்கும் இந்த மக்கள் மகத்தான விசுவாசம் கொண்டவர்களாய், மற்றும் இதை நோக்கி, “அது சத்தியம் தான் என்று நான் விசுவாசிக்கிறேன்”, என்று சொல்லட்டும். பின் கர்த்தாவே, அவர்களை சுகப்படுத்தும். அவர்கள் சுகமடைந்தார்களென்று, உம்முடைய ஊழியக்காரனாகிய நான் அவர்கள் பக்கமாக திரும்பி, நீங்கள் சுகமடைந்தீர்களென்று அவர்களிடம் அறிவிக்கட்டும். இதை அருளும் பிதாவே. உம்மிடத்தில் உத்தமமாக நான் ஜெபிக்கையில் நீர் என் ஜெபத்தை கேட்பீராக? உம்முடைய பிரியமான குமாரன் இயேசுவின் பேரில் கேட்கிறேன் ஆமென்! 57. (சகோதரர் பிரான்ஹாம் யாரோ ஒருவருடன் பேசுகிறார்). ஜெப அட்டைகளை கொடுத்ததாக என்னுடைய மகன் கூறினான். இன்றைக்கு D ஜெப அட்டைகள் கொடுத்துள்ளதாக கூறினான். இந்த இரவுப் பொழுதில் நாம் துவங்கலாம்; கடந்த இரவு நாம் ஒன்றில் துவங்கினோம் அல்லவா? (ஒலிநாடாவில் இடைவெளி) அவர்களிடத்தில் தலைகளைத் தாழ்த்தியிருக்க சொன்னேன். இந்த குளிர்ந்த ஆவி அப்படியாக பாய்ந்து கொண்டிருந்தது. அது எங்கு இருந்து வருகிறது என்பதை நான் உணர்ந்தேன். மற்றும் கூட்டத்தினர் பின்னால் பார்த்தேன், அங்கு ஒரு மனிதன் தலையை நிமிர்த்தி உட்கார்ந்திருந்தார். மற்றும் சிலர் அவ்வாறு... நான், "ஐயா உங்கள் தலையை தாழ்த்துவீர்களா?”, என்றேன். அவன் என்னைப் பார்த்து நகைத்தான். மேலும் மறுபடியுமாக நான் ஜெபித்தேன் அது அந்த பிள்ளையை விட்டு செல்ல மறுத்தது. ஏனெனில் அவர், "மக்கள் உன்னை விசுவாசிக்கும்படி நீர் செய்வீரென்றால்”, என்று சொல்லியிருந்தார். இந்தக் காரியத்தை அவர்கள் விசுவாசிக்கவில்லை என்று காண்பித்தது. ஆனால் நீங்கள் அவர்களிடத்தில் கேட்பதை அவர்கள் செய்வார்கள். ஆகவே நான் மறுபடியுமாக முயற்சித்தேன். அது செல்லவில்லை. நான், "இப்போது நினைவு கொள்ளுங்கள். இதைப் பாருங்கள், இதற்கு நான் பொறுப்பில்லை”, என்றேன். 58. மேலும் நான், "சர்வ வல்லமையுள்ள தேவனே இந்த குற்றத்திற்காக, இந்த பரிதாபமான, அப்பாவியான சிறு பிள்ளையை அவதிக்குள்ளாக்காதீர் என்றேன்”, பிறகு சரியான நிலையாக இருந்தது. நான் தேவனை சுகப்படுத்தும்படி அழைத்தேன். மற்றும் அந்த ஆவியை கடிந்து கொண்டபிறகு அந்த பிள்ளை அமைதியானான். மற்றும் அந்த மனிதன், ஒவ்வொருவரும் அவர்களில் காக்காய்வலிப்பினால் தாக்கப்பட்டு, தரையில் மேலும் கீழுமாக குதித்துக் கொண்டும், அலறிக்கொண்டும், உரக்கக் கத்திக் கொண்டும் அநேக காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள், அப்படியாக அவர்களில் எத்தனை பேர் தாக்கப்பட்டார்களோ அதை நான் மறந்துவிட்டேன். எனக்கு தெரிந்து இன்றைய நாள் வரை, அவர்கள் அப்படியே அந்த காக்காய்வலி வியாதியோடு இருக்கிறார்கள். கொஞ்ச காலத்திற்கு முன் அரிசோனா பீனிக்ஸில் ஒரு மனிதன், (இப்போது அவர் மரித்திருப்பார்) புற்று நோயுடன் இருந்தவரை நான் பார்த்தேன். எல்லாம் அவருக்கு தெரியும் என்பதுபோல் இருந்தார். அவர், "இவை எல்லாம் மனோதத்துவம்”, என்றார். சில இரவுகள் வயிற்று வலியோடு அவர் துடித்து மருத்துவரிடத்தில் சென்றபோது அது மனோதத்துவம் அல்ல என்பதை உணர்ந்தார். அந்த நபருக்கு புற்றுநோய் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது...? இப்பொழுது பயபக்தியோடு இருங்கள். சபைகளில் இப்படி விளையாடக் கூடாது. கர்த்தராகிய இயேசு இங்கு இருக்கிறார். அமெரிக்க மக்களாகிய நாம் தலைகணம், திமிர், கர்வம் மற்றும் ஆணவத்தோடு, நமக்கு தான் எல்லாம் தெரியும் என்று நாம் இன்னுமாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய முன்னோர்களின் நற்பெயரில், நாம் நின்று ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். 59. இஸ்ரவேல், தேவனின் சித்தத்தை விட்டு விலகியபோது, அவர்கள் அதற்காக அவதிப்பட்டார்கள். நமக்கும் அவ்வாறே சம்பவிக்கும். ஆகவே நீங்கள் பயபக்தியோடு இருந்து இப்பொழுது அதை நினைவு கூறுங்கள். நல்லது, இதை கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். எத்தனை கிறிஸ்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள்? கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள், அது அற்புதமானது. இன்றிரவின் பொழுதிலே அது நூறு சதவீதம் தெளிவாக இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அது அருமையாயிருக்கிறது. நான் உங்களிடத்தில் கூறினது உண்மையென்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது. உங்கள் இருதயங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அதை உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்தீர்களென்றால், பரிசுத்தாவியின் மூலமாக நீங்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் நீங்கள் காண்பீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன். கர்த்தருடைய அற்புதங்களும் அடையாளங்களும் இந்த விதமாக வருகிறது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நல்லது, உள்ளே வருகின்ற நோயாளிகள் பதினைந்து பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரு கூட்டமாக வருகிறார்கள். அவர்கள் வழக்கமாக... என்னை அவர்களிடத்தில் போகவிடாமல், அவர்களில் சிலர் மாத்திரமே என்னிடத்தில் வருகிறார்கள். நான் ஒரு நபரிடத்தில் பேசும்போது, அவர்களிடத்தில் தொடர்பு கொள்ளும் வரையிலும், அவர்களிடத்தில் நான் பேசிக் கொண்டிருப்பேன். அவர்களுடைய ஜீவியத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கும்படியாக, அவர்களிடத்தில் நான் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பேன். அவர்களிடத்தில் போதுமான விசுவாசம் இருக்கிறதா என்று நான் அறியும் வரையிலும் நான் அந்த நபரை பார்த்துக் கொண்டிருப்பேன். பின்பு நான் அவர் மேல் கைகளை வைப்பேன். இப்பொழுது நீங்கள் இதை கூர்ந்து கவனியுங்கள். ஒரு நபர் மேலே ஏறி ஜெபவரிசையில் வரும் போது அந்த நபரை நான் கவனிப்பேன், அவருக்கு ஏதாவது அறுவை சிகிச்சை நடந்திருந்தால், அல்லது ஏதாவதொரு தொல்லையில் இருப்பாரென்று நான் கான்பேனென்றால்..., "நீ ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபராயிருக்கிறாய்", என்று நான் சொல்லுவேன். அப்பொழுது அதனால் அவன் அதிர்ச்சியடைவான், சரி நல்லது, என்னுடைய கரங்களை அவன் மேல் வைத்து, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரனே அல்லது சகோதரியே என்று நான் சொல்லி, அவர்களை நான் போகச் சொல்லுவேன். (இப்பொழுது அவர்களுடைய மனத்திறன்களை பயன்படுத்த முயற்சித்தால்...) இயேசு, "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்", என்று சொன்னார். அதை நான் நிரூபித்தேன். சிநேகிதனே, தொல்லைகள் உங்களை மேற்கொள்ளவிடாதீர்கள். அது உங்களிடத்தில் வரட்டும். அவர் இங்கிருக்கிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அது சாத்தியமற்றது என்று இங்கிருக்கிற ஒவ்வொருவரும் அதை அறிவார்கள்... நான் மட்டும் அதை அனுமதிக்க... பரிசுத்த ஆவியானவரே அதை செய்கிறார். இப்பொழுது நீங்கள் என்னை நம்புகிறீர்கள், ஆகையால் நீங்கள் பயபக்தியோடு நில்லுங்கள், மற்றும் சில நேரங்களில்... கவனியுங்கள், மோசேவிற்கு இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டது, அது உண்மையல்லவா? அதை நீங்கள் எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அது வேதாகமத்தில் உள்ளது. தேவன் மோசேயை அனுப்பினார், மற்றும் மோசேயின் செய்தி உண்மையென்று இந்த இரண்டு அடையாளங்கள் மூலமாக அந்த மக்களுக்கு உறுதிப்படுத்தினார். அது உண்மைதானே? மோசே தன்னுடைய கரத்தை மார்பின் மேல் வைத்து... அது வெண்குஷ்டத்தை குணப்படுத்தியது. அது சரிதானே? மோசே ஒரு கோலை சர்ப்பமாக்கினான். அவர் இஸ்ரவேலருக்கு முன்பாக அதைச் செய்தார். அதன் பின்பு அவர்களில் ஒவ்வொருவரும் அணிவகுத்து வெளியில் சென்றார்கள். அது சரிதானே? இப்பொழுது ஒவ்வொரு முறையும் மோசே இஸ்ரவேலனை சந்திக்கும் போது, தன் கரத்தை வைத்து அந்த குஷ்டரேகத்தை குணப்படுத்த தேவையில்லை. அவன் அதை ஒருமுறை செய்தான், அத்துடன் அது முடிவுபெற்றது. 60. இப்பொழுது வேதாகமத்தின் வெளிச்சத்தில், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நான் இந்த அறிக்கையை கூறுவேனென்றால் மற்றும் இந்த கூட்டத்தில் இருக்கும் ஒரு நபரை நீங்கள் கொண்டு வந்து அவரைப் பற்றி நான் ஒன்றும் அறியாமல் இருந்தபோதும், அந்த நபருக்குள் இருக்கும் காரியங்களை நான் சொல்லுவே னென்றால் தேவன் அதை உறுதிப்படுத்துவார், (அதை அந்த நபர் விரும்புவாரா என்று எனக்குத் தெரியாது. அது அவரைப் பொறுத்தது). ஆனால் அது அப்படியாக இருந்தால் சபை முழுவதும் அதை விசுவாசிக்க வேண்டும். அவர்களில் ஒவ்வொருவரும் எழும்பி நின்று தங்களுடைய சுகத்தை உரிமைகோரி அவர்கள் குணமாகி இந்த கட்டிடத்தில் இருந்து சுகம் பெற்ற மனிதனாக வெளியே செல்வார்கள், ஏனென்றால் அவர்கள் தங்களுடைய சுகத்தை உரிமைகோரியுள்ளார்கள். அது உண்மைதானே? சரி நல்லது, ஒவ்வொருவரும் பயபக்தியோடு இருங்கள். ஐயா முன்னுக்கு வாருங்கள். இப்பொழுது இந்த மேடையின் மீது வருகின்ற மக்கள், இவர்களை குறித்து நான் ஒன்றும் அறியவில்லை. ஒருவேளை நான் சிலரை அறியக் கூடும். இப்பொழுது முதலாவது இந்த வரிசையை நான் பார்க்கட்டும். இல்லை ஐயா. இவர்களில் யாரையும் எனக்கு தெரியாது. உங்களில் யாருக்காவது என்னை தெரியுமா? உங்களில் யாருக்கும் என்னை தெரியாது, உங்களுக்கு தெரியுமா? இங்கிருக்கிற நாம் அந்நியர்களாக இருக்கிறோமல்லவா? இங்கிருக்கிற நாம் எல்லோரும் அந்நியர்களாக இருக்கிறோமல்லவா? நல்லது. இப்பொழுது நான் உங்களிடத்தில் ஒரு காரியத்தை கேட்க விரும்புகிறேன். இதை என்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து கேட்கிறேன். நீங்கள் இதை விசுவாசிக்க வில்லையென்றால், இதை நீங்கள் விசுவாசிக்கவில்லை யென்றால் இங்கு வரவேண்டாம். இங்கு பரிசுத்த ஆவியானவர் நின்று உங்கள் ஜீவியத்தில் என்ன நடந்தது என்று எனக்கு வெளிப்படுத்தி, மற்றும் உங்களுடைய ஜீவியத்தில் என்ன இருக்கிறது என்று கூறும்பொழுது அதை நீங்கள் சந்தேகித்தால், இதைவிட மோசமான விளைவை நீங்கள் சந்திப்பீர்கள். அதை நீங்கள் அறிவீர்களா? வேதாகமம் இதைக் குறித்து என்ன சொல்கிறது, "நீங்கள் சென்று...”, இது என்னவாகும், (சபையார் இது பாவமென்று கூறுகிறார்கள்), பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். அது சரிதானே? பாவம் என்றால், "அவிசுவாசம்”, என்று எத்தனை பேர் அறிவீர்கள். அது உண்மை. தேவன் தாமே இங்கிருப்பதை உறுதிப்படுத்தினால், ஆனால் அவர் உங்களிடத்தில் என்ன சொன்னாரோ அதை நம்பாமல் நீங்கள் செல்வீர்களென்றால், பின்பு மோசமான காரியங்கள் உங்களுக்கு சம்பவிக்கும். புரிகிறதா? "நீங்கள் புறப்பட்டு போய், மற்றும் பாவம்...", வேதாகமம், அவரை விசுவாசிக்காதவன் ஏற்கனவே ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டான்", என்று கூறகிறது. அது உண்மைதானே? பாவம் என்றால், "அவிசுவாசம்", சரி நல்லது. இப்பொழுது இரண்டு அல்லது மூன்று பேர் ஜெபிக்கும் வரையிலும் அது சிறிது தாமதமாக இருக்கும். ஏனென்றால் நான் அதை பார்க்கக் கூடிய இடத்திற்கு, ஆவியின் அபிஷேகத்திற்குள் நான் செல்லும் வரையிலும் நான் இதை அப்படியாக செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால், நான் உங்களிடத்தில் சிறிது நேரம் பேச வேண்டியதாயிருக்கிறது, ஆகையால் சிறிது நேரம் நீங்கள் எல்லோரும் என்னை பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த மேடையின் மேல் தேவன் யாராவது ஒரு நபரை சுகமளித்தால், வெளியிலிருக்கிற நீங்களும் கூட இதை விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 61. ஒரு நிமிடம் இது என்னை உலுக்கியது. நான் சுற்றி பார்க்கும்போது, நான் அறிந்த ஒரு நபரை பார்த்தேன். அவர் ஒரு வயதான மனிதன், அவர், பெந்தெகொஸ்தே மத்தியில் முதலாவது நான் பார்த்த ஒரு காரியம், நான் வாலிபனாக இருந்தபோது என்னுடைய அறையில் நான் உட்கார்ந்திருந்த போது அவர் வந்தார், பெந்தெகொஸ்தே மக்கள், நான் அவர்களை பற்றி குறை கூறவில்லை. இந்த காரியங்கள் நடப்பதற்கு முன்பாக, அவர்கள் அந்நிய பாஷைகள் பேசுவதை நான் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னால் எப்பொழுதுமே அதை புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னுமாக நான், அவர்களில் சிலர் அதை விசுவாசிக்கும்படியாக செய்கிறார்கள் என்று நாம் அறிவோம், ஆனால் அதற்கு பின்பாக அங்கு ஒரு அசலான காரியம் ஒன்று உள்ளது. நான் ஒரு வாலிப பிரசங்கியாக இருந்த போது, ஒரு நாளிலே இந்த மனிதன் என்னுடைய அறைக்கு வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். நான் என்னுடைய அறைக்குள் வந்தபோது, அவர் ஒரு விதமாக எகிறி குதித்து அவருடைய கரங்களை உயர்த்தி அந்நிய பாஷையில் பேசினார். மற்றும், "கர்த்தர் உரைக்கிறதாவது, உனக்கு முன்பாக ஒரு மகத்தான ஊழியம் இருக்கிறது. இந்த ஊழியத்தினால் தேவன் உன்னை பயன்படுத்தி இந்த உலகத்தை அசைப்பார்", என்று அவர் அந்நிய பாஷையில் பேசினார். அந்த மூத்த சகோதரன், அவர் ஜான் ரேயான், இப்பொழுது சரியாக பின்பாக உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். சகோரன் ரேயான் எழும்பி நில்லுங்கள், இதோ அங்கே நிற்கிறார். இந்த சகோதரன் மிசிகானிலிருந்து வருவார், அவர் எழும்பி நின்று, அந்நிய பாஷை பேசி, தேவன் அவரிடத்தில் சொன்னதை கூறியுள்ளார்... இந்த மனிதனைக் குறித்து நான் எப்படி நம்ப வேண்டுமென்று எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய பிரியமான சகோதரனே, இந்த மேடையிலிருந்து நான் உங்களை அரவணைக்கிறேன். அந்நிய பாஷையில் பேசின உங்களுடைய வார்த்தைகள், அது உண்மையானது. இப்பொழுது தேவன் உங்களோடிருப்பாராக. நான் சுற்றிப் பார்த்தபோது, அவரை நான் அடையாளம் கண்டுக் கொண்டேன். அவரை நான் பார்த்தபோது சிறிது நேரம், என்னால் பேச முடியவில்லை. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது. 62. இப்பொழுது என்னுடைய பிரியமான சகோதரனே, நீ ஒரு நோயாளி என்று நான் யூகிக்கிறேன். அதனால் தான் நீ நீ ஜெபிப்பதற்காக வந்திருக்கிறாய். இப்பொழுது சிறிது நேரம் நான் உன்னிடத்தில் பேச வேண்டியதாக உள்ளது. சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே, ஒலி பெருக்கிகளையும், அல்லது அவைகள் எங்குள்ளது என்று கவனியுங்கள். நம்முடைய வாழ்கையில் நீயும் நானும் அந்நியர்கள் என்று அறிந்திருக்கிறோம். ஒரு நாள் நாம் இந்த தேசத்தினூடாக கடந்து செல்ல வேண்டும் என்றும், நாம் எங்கே போகிறோம் என்று நாம் அறிவோம். நமது தீர்மானம் அல்லது நமது இலக்கு இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் நமது விசுவாசத்தின் மூலமாக அது தீர்மானிக்கப்படும். அது உண்மை. இப்பொழுது நம் வாழ்க்கையில் அந்நியர்களாக இருந்தால், ஏதோவொரு தவறு உன்னிடத்தில் உள்ளது. அது என்ன தவறாயிருந்தாலும், உன்னுடைய நிலைமை என்னவென்று தேவன் இந்த நேரத்தில் எனக்கு வெளிப்படுத்த வல்லவராயிருக்கிறார். அதை நீ விசுவாசிக்கிறாயா?ஆம் ஐயா.கர்த்தருடைய தூதனை பற்றி நான் சொன்னதை நீ அது சத்தியமென்று உறுதியாக நம்புகிறீர். ஐயா அதை நீங்கள் நம்புகிறீர்களா? இந்த புகைப்படத்தை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? இதை நீ பார்த்ததில்லை, நாம் இங்கு நிற்கிற சமயத்தில் அதை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். ஆகையால் அதை நீங்கள்... அந்த சுழலும் அக்கினி ஜூவாலைகள் தான் அந்த கர்த்தருடைய தூதன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆம் ஐயா. இப்பொழுது கூட ஏதோவொன்று சம்பவிக்கும் என்று நீங்கள் உணருகிறீர்களா? ஐயா அது அப்படிதானே? ஒரு வெதுவெதுப்பான இனிமையான ஒரு வினோதமான உணர்வை, நீங்கள் உணர ஆரம்பிக்கிறீர்களா? அது உண்மைதானே? அது உண்மையென்றால், மக்களுக்கு முன்பாக உங்கள் கரத்தை உயர்த்திக் காட்டுங்கள். அது உண்மை மற்றும் அந்நியர்களாயிருக்கிறோம். 63. இப்பொழுது, ஒரு விசை நாத்தான்வேல், இயேசு கிறிஸ்துவை பார்க்க வந்த போது, இதே ஆவி தான் இயேசுவின் மேல் இருந்தது, "இதோ ஒரு இஸ்ரவேலன், உண்மையாகவே, இவருக்குள் எந்தவொரு கபடமும் இல்லை". வேறு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால், உங்களைப் போலவே நானும் ஒரு கிறிஸ்தவன் என்று கூறுவேன். புரிந்ததா? அது நல்லது. நாத்தான்வேல், சுற்றிப் பார்த்து, "ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?”, என்றான் நல்லது நீங்கள்... கூட்டத்தில் உள்ள யாராவது ஒரு நபர் இப்படி சொல்லக் கூடும், அது சொல்வதற்கு விசித்திரமாக இருக்கிறது, "நிச்சயமாக அவர் ஒரு கிறிஸ்தவர் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவர் அங்கிருக்கமாட்டார்”, அவர் ஒரு விசுவாசி என்று இயேசு சொல்லியிருக்கிறார், அல்லது அவன் இயேசுவினிடத்தில் வந்திருக்கமாட்டான். புரிந்ததா, அவன் ஒரு விசுவாசி என்று அவர் அறிவார். ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர் என்று கேட்டான். "பிலிப்பு, உன்னை அழைக்கிறதற்கு முன்னே", உன்னை நான் பார்த்தேன் என்று இயேசு சொன்னார். அது உண்மை. மற்றும் அவர் யோவான் அவ்வாறு நான் செய்த இந்த கிரியையைக் காட்டிலும் நீங்களும் அதிகமான கிரியைகளை செய்வீர்கள்", அல்லது, "நான் என் பிதாவினிடத்தில் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்”, அது உண்மைதானே? சரி நல்லது. இப்பொழுது உங்கள் கரங்களை கீழே இறக்குங்கள். ஏதோவொரு காரியம் சம்பவிக்கப் போகிறதை நீர் அறிவீர். 64. இப்பொழுது இது என்ன, நான் உன்னிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன், உன்னிடத்தில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. இங்கிருக்கிற ஏதோ ஒன்று உன்னைப்பற்றி... அது நீ உணருகிறாய், நானும் உணருகிறேன். அது தொடர்புக்குள் வந்துள்ளது, அதன்படி உன் வியாதிக்கும் மற்றும் இந்த ஆவிக்கும் நடுவில் ஒரு போராட்டம் நடக்கிறது என்று உனக்கு புரிகிறதா. அதை தாண்டி உன்னுடைய ஆத்துமா இதை விசுவாசிக்கிறது, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நீ சென்று சுகத்தை பெற்றுக் கொள்.ஆம் ஐயா.நீ ஒரு விசுவாசி. அதை நான் என் முழு உள்ளத்தோடு நம்புகிறேன். ஆம் ஐயா. நீ இதற்கு முன்பு விசுவாசியாக இல்லை. இல்லை. நீ ஒரு விமர்சிக்கிறவனாய் இருந்தாய். நீ இதை விமர்சித்தாய், நீ விமர்சிக்கவில்லையா? அது உண்மைதானே? ஆம் ஐயா, நீ விமர்சித்தாய். அது என்னுடைய கூட்டமாக இருக்கலாம், என்று நான் நம்புகிறேன். நீ தலையை அசைப்பதை நான் காண்கிறேன். (அந்த சகோதரன் மன்னிக்கும்படியாக கேட்கிறான்). சகோதரனே நீ மன்னிக்கப்பட்டாய். ஆம் ஐயா,ஆம் ஐயா, ஆம் ஐயா. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ ஒரு விதமான விளையாட்டு வீரர், நீ வேட்டையாடுவாய் அல்லது அது போன்ற ஏதோவொன்று அல்லவா,ஆம் ஐயா, ஆம் ஐயா. ஒரு துப்பாக்கியுடன் நீ வேட்டையாடுவதை நான் காண்கிறேன். அது உண்மை. ஒருவிசை காவல் துறை அதிகாரியாக அல்லது அதுபோன்று ஏதோ ஒருவனாக நீ இருந்தாயல்லவா? ஆமாம். நீ காவல் துறையில் இருந்தாய் அல்லவா? ஆம் ஐயா. நீ இருந்தாய். அதை நான் பார்த்தேன். நீ தொண்டை வலியினால் தொல்லைப்படுகிறீர்கள். அது உண்மை தானே சகோதரனே, அநேக வருடங்களாக உங்கள் தொண்டையின் நரம்பினால் நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள்.அது உண்மை தானே? என் சகோதரனே நீங்கள் இங்கே வாருங்கள். இரக்கமுள்ள தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, எல்லா நன்மைகளையும் அளிக்கிறவரே, உம்முடைய ஆசீர்வாதங்கள் இந்த சகோதரனின் மேல் வருவதாக, மற்றும் ஒரு சுகம் பெற்ற மனிதனாக அவர் செல்வாராக, அவருடைய வாழ்நாளெல்லாம் உமக்கு சேவை செய்வாராக, அன்பான தேவனே, இயேசு கிறிஸ்து என்ற உம்முடைய குமாரனின் நாமத்தில் கேட்கிறேன். சகோதரனே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது களிகூர்ந்து கொண்டே செல்லுங்கள். நீங்கள் நலமாக இருக்கப் போகிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதெல்லாம் உண்மை, அவரை மட்டும் நம்புங்கள். ஆமென். தாழ்மையான சகோதரனே. நான் பார்த்தபோது, இது ஒரு ஆராதனை என்று நான் நினைத்தேன், ஒரு சாம்பல் நிற சூட் அணிந்த மெலிந்த தேகமுள்ள ஒரு மனிதனிடத்தில் இப்படியாக சொல்வதை நான் காண்கிறேன், "அதெல்லாம் ஒன்றுமில்லை, அதெல்லாம் ஒன்றுமில்லை”, அவர் சொல்லும் சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது. ஆனால் அது மேடையில் அதைப் பற்றி சொல்லும்போது அவன் என் கரத்தை தாவிப் பிடித்து, சகோதரனே என்னை மன்னியுங்கள் என்று சொன்னார். சகோதரனே, தேவனிடத்தில் சிறிய விஷ யத்தைக் கூட மறைக்க முடியாது. அவர் எல்லாவற்றையும் அறிந்தவராயிருக்கிறார். மற்றும் எல்லா தவறுகளையும் அவர் திருத்துகிறார்.ஓ, நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் நேசிப்பதை நீங்கள் எப்படி தடுக்க முடியும்? அது அருமையான ஒன்றாயிருக்கிறது. சரி நல்லது. நீங்கள் பயபக்தியோடு இருங்கள். அந்த சகோதரனை நீங்கள் அழைத்து வாருங்கள். 65. சகோதரனே எப்படியிருக்கிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களோடிருப்பாராக. எல்லோரும் இப்படிதான் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். தகப்பனே ஒரு நிமிடம் இங்கு கவனியுங்கள். நம் வாழ்க்கையில் நீயும் நானும் அந்நியர்களாயிருக்கிறோம். இப்பொழுது நாம் இங்கு சந்திக்கும் வரையில் எங்களை ஒருவருக்கொருவர் தெரியாது. ஆனாலும் நான் உங்களிடத்தில் உண்மையையே சொல்வேன் என்று நீ உண்மையாக நம்புகிறாய். சகோதரனே நீ உண்மையாகவே நம்புகிறாயா? ஆம் ஐயா. இப்பொழுது நீ உன்னுடைய கல்லீரலில் ஏதோவொரு பிரச்சனையினால் அவதிப்படுகிறீர்கள். அது உண்மைதானே. இது உங்களை நீண்ட காலமாக தொல்லைப்படுத்துகிறது. அது உண்மைதானே? நான் உன்னை ஒரு இடத்தில் காண்கிறேன்... நீ இங்கிருந்து வெகு தொலைவில் இருக்கிறாய். நீ ஒரு அந்நியனாக இருக்கிறீர். நீ இந்த பட்டணத்தை சார்ந்தவன் அல்ல, அல்லவா? நீ வெகு தூரத்திலிருந்து வந்திருக்கிறாய், அநேக ஏரிகள் கொண்ட ஒரு தேசத்தினூடாக நீ வந்திருக்கிறாய், நீர் அப்படித்தானே வந்தாய்? அது உண்மைதானே? நான் பார்க்கிறேன்... நீ ஒரு ஏழையான ஒரு மனிதன், இன்றிரவில் நீ சந்தோஷ மாயிருக்கிறாய், சில நிமிடங்கள் முன்பாக உன்னுடைய ஜெப அட்டை எண்னை அழைக்கும் போதிலிருந்தே நீ சந்தோஷ மாயிருந்தாய், அது அப்படித்தானே? உன்னிடத்தில் பணம் இல்லாததினால் நாளை நீங்கள் வெளியேற வேண்டும். தகப்பனே அது சரிதானே? தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். இங்கே வாருங்கள். பரலோகப்பிதாவே, என்னுடைய சகோதரனிடத்தில் நீர் இரக்கமாயிருக்கும்படி நான் ஜெபிக்கிறேன்.ஓ,தேவனே, அந்த அறுவை சிகிச்சைக்காக அந்த மேஜையின் அருகில், அந்த மருத்துவர் அசைகிறதை நான் பார்க்கிறேன்.. அது செய்யப்பட வேண்டியதில்லை என்று கர்த்தாவே இதை அருளும். உம்முடைய நாமத்தினாலே, இன்னொரு சகோதரன், அவர் நலம் பெற்று ஜீவிப்பதற்காக நான் அவரை ஆசீர்வதிக்கிறேன். இயேசு கிறிஸ்து நாமத்தினாலே ஆமென். சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தகப்பனே, நீங்கள் நன்றாக இருக்கப்போகிறீர்கள். செல்லுங்கள், உம்முடைய அந்த அறுவை சிகிச்சை நிலுவையில் உள்ளது. அது உண்மை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவர் கூறினார். ஆனால் தேவனிடத்தில் இப்பொழுது விசுவாசமாயிருங்கள். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லோரும், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்", என்று சொல்லுவோமாக, "தேவனுக்கே துதி உண்டாவதாக", என்று நாம் சொல்வோமாக. வேதாகமம், "மக்கள் தேவனை மேன்மைப்படுத்தினார்கள், அல்லது தேவனை மகிமைப்படுத்தி னார்கள்", அதே இயேசு நேற்றும்,இன்றும், என்றும் மாறாதவராக இங்கேயிருக்கிறார். 66. சகோதரியே வாருங்கள், உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது மக்களை நோக்கிப் பார்க்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்களை என்னை நோக்கிப் பார்க்க சொல்லும் காரணம் என்னவென்றால், இந்த விஷயத்தை நான் கூறுவதனால், அவர்கள்...அவர்களுக்கு முன்பாக ஒரு தரிசனம் உள்ளது என்று நான் அறிவேன். ஒருவேளை பல ஆண்டுகளுக்கு முன்பாக,நான் என்ன சொன்னேனோ, அவைகளை அவர்கள் மறந்து போயிருக்கலாம். பல வருடங்களாக இருவரையும் நான் பார்க்கிறேன், மற்றும் அவர்கள் அதைப் பற்றி நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அது சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையாயிருக்கிறது. ஆமென். ஆமென் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால், "அது அப்படியே நடப்பதாக”, இங்கிருக்கிற இந்த ஸ்திரீயை நோக்கி நான் பார்க்கவில்லை. நான் பார்க்கவில்லை... சகோதரியே இன்னும் சற்று முன்பாக நடந்து வாருங்கள். நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உனக்குள் என்ன பிரச்சனை இருக்கிறது என்று இங்கு தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரா? அவரால் முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? தேவனுடைய ஆவியினால் உனக்குள் என்ன தவறு உள்ளது என்று என்னால் சொல்லக் கூடும் என்றால், உன்னை சுகமளிக்கிறவராக இயேசு கிறிஸ்துவை நீ ஏற்றுக்கொள்வாயா? அவரை நீ ஏற்றுக் கொள்வாயா? சரி நல்லது. இந்த இரவில் இதை தேவன் நமக்கு அருளுவார் என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. ஆம், சீமாட்டியே, நீ ஒரு சர்க்கரை வியாதி உள்ளவள். அது உண்மைதானே? அவருடைய நாமத்தில் உன்னை சுகமாக்குவார், மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்கள் செல்லுங்கள். *கர்த்தருக்கே ஸ்தோத்திரம் என்று நாம் சொல்லுவோமாக, நல்லது, எல்லோருமாக, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்", என்று நாம் சொல்லுவோமாக, கர்த்தருடைய நாமத்திற்கே துதி உண்டாவதாக. அந்த மனிதன் அப்படியாக களிகூர்ந்து கொண்டிருக்கிறார். 67. நல்லது, அந்த சீமாட்டியை கொண்டு வாருங்கள். தேவன் உங்களை சுகமாக்குவார் என்று உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். அந்த நோயாளி இங்கே நிற்பதினால், சகோதரியே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அந்த தேவனுடைய குமாரனாகிய அந்த இயேசு கிறிஸ்து இந்த இரவின் பொழுதிலே இந்த கட்டிடத்திலே இங்கு இருக்கிறார் என்று சீமாட்டியே உங்களால் விசுவாசிக்க முடிகிறதா? உங்கள் முழு இருதயத்துடன் நீங்கள் நம்புகிறீர்களா என்று நான் கேட்டேன். உங்கள் முழு உள்ளத்துடன், நல்லது. உங்கள் முழு இருதயத்துடன் அவரை நேசித்து மற்றும் விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது உங்களுக்குள் என்ன தொல்லை இருக்கிறது என்று தேவனுடைய ஆவியின் மூலமாக, பரிசுத்த ஆவியின் மூலமாக, கர்த்தருடைய தூதனின் மூலமாக எனக்கு அருகாமையில் நின்று என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார், நீங்கள் அவரை சுகமளிக்கிறவராக அவரை ஏற்றுக் கொள்வீர்களா? சகோதரியே, ஸ்திரீகளுக்கு உள்ள உங்களுடைய தொல்லை உங்களை விட்டு போய்விட்டது. கர்த்தருடைய நாமத்தினால் நீங்கள் நன்றாக இருங்கள், இப்பொழுது நீங்கள் இந்த மேடையை விட்டு செல்லலாம். ஆமென். வாலிப தாயாரே, நீங்கள் சுகத்தோடு, நலத்தோடு இப்பொழுது செல்லலாம். தேவன் உங்களோடிருப்பாராக, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படியானால், "கர்த்தராகிய இயேசுவிற்கே துதி உண்டாவதாக", என்று நாம் சொல்லலாம். அப்படியாக நாம் எல்லோரும்... 68. நல்லது, சீமாட்டியே நீங்கள் முன்னுக்கு வாருங்கள். சகோதரியே நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? ஒரு நிமிடம் நான் உங்களிடத்தில் நான் பேசியாக வேண்டும். இப்பொழுது அது உங்களை காயப்படுத்தாது. புரிந்ததா? அந்த கர்த்தருடைய தூதன்... இப்பொழுது தான் இங்கே ஒரு நிமிடத்திற்கு முன்பாக வந்தார். நான் உங்களுக்கு ஒன்றை காண்பிக்க விரும்புகிறேன்.இந்த புகைப்படத்தை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? இங்குள்ள இந்த புகைப்படத்தை நோக்கி நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கர்த்தருடைய தூதனை நீங்கள் பார்க்கிறீர்களா? அந்த பட்சிக்கும் அக்கினியை நீங்கள் பார்க்கிறீர்களா? இப்பொழுது ஏதோவொரு விசித்திரமான உணர்வை நீங்கள் உணர்கிறீர்களா? இப்பொழுது அதுதான் இதுவாக இருக்கிறது. பாருங்கள். சகோதரியே இப்பொழுது அது உங்களுக்கு உதவி செய்யும். நான் அவருடைய ஊழியக்காரன் மட்டும் தான். நான் இயேசு கிறிஸ்துவினுடைய ஒரு ஊழியக்காரன் தான். இப்பொழுது நாத்தான்வேல் எங்கு இருந்தார் என்ற இடத்தை இயேசு அறிவார். அந்த ஸ்திரீயிடத்தில் என்ன தொல்லை உள்ளது என்பதை இயேசு அறிவார், ஆனால் முதலாவது அவர் அவளிடத்தில் பேசினார். ஓரிடத்தில் அவர் இப்படியாக சொன்னார்... பேதுரு, மற்றும் யோவான் அந்த அலங்கார வாசலைக் கடந்து போகும் போது தாயின் கருவிலிருந்தே முடமாக இருந்த ஒரு மனிதனை அவர்கள் பார்த்தார்கள். அவர் சொன்னார், "எங்களை நோக்கிப் பார்", அது சரிதானே? வேத வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், எங்களை நோக்கிப் பார் என்று சொன்னதும், அந்த மனிதன் ஏதாவது பணம் பெற்றுக் கொள்வேன் என்ற எண்ணத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது பேதுரு, "வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட", என்று சொன்னார். அந்த மனிதன் பலவீனமாக இருந்தான். அவனுடைய கணுகால் எலும்புகள் பலம் பெறும்வரையில் பேதுரு அவனை பிடித்துக் கொண்டிருந்தான். அதற்கு பின்பு நடக்க ஆரம்பித்தான், பிறகு அவன் எகிறி குதித்து தேவனை துதிக்க ஆரம்பித்தான். அந்த வயதான மனிதன், ஏறக்குறைய நாற்பது வயதிருக்கக் கூடும். இந்த அற்புதமான காரியம் அங்கு நிகழ்ந்தது. நான் உங்களை பார்க்கும்படியாக, நான் உங்களை அமைதிப்படுத்த முயற்சிக்கிறேன்... நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிகிறதா? அது வேத வாக்கியமாயிருக்கிறது, அது அப்படிதானே? அது உண்மையல்லவா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரா?, அதை நீ நம்புகிறாயா? 69. சகோதரியே, நீங்கள் அநேக மக்களால் தவறாக எண்ணப்பட்டீர்கள். அது உண்மைதானே? உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள். அது சரிதானே? நீங்கள் ஒரு நரம்பியல், மனநரம்பியல், ஒரு சரியான மனநிலை இல்லாத நபர் என்று கூறுகிறார்கள். அது உண்மைதானே? அது உங்களுக்கு சோர்வையும், பதட்டத்தையும் எப்பொழுதும் வருத்தத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்த ஒரு காரணமாயுள்ளது. அது சரிதானே? அது மட்டுமல்லாமல் வேறு ஒரு காரியத்தையும் நான் பார்க்கிறேன். ஒரு மேஜை போல ஒன்றை நான் காண்கிறேன்...நீங்கள் ஆகாரத்தை புசிக்க மறுக்கிறீர்கள். உமக்கு வயிற்றிலும் ஒரு பிரச்சனை உள்ளது, உங்களுக்கு உள்ளதா?, அது உண்மைதானே? சில வகை ஆகாரங்களையும் மற்றும் அதில் சிலவற்றை உங்களால் சாப்பிட முடியாது. அது சரிதானே? அப்பொழுது ஏதோவொன்று நடந்ததல்லவா? சகோதரியே உங்கள் விசுவாசம் உங்களை சுகமாக்கியது. நீங்கள் வீட்டிற்கு சென்று உங்களுக்கு என்ன விருப்பமோ அதை சாப்பிடுங்கள். நீங்கள் நலமாகிவிட்டீர்கள். "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கே துதி உண்டாவதாக, அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக", என்று நாம் சொல்லுவோமாக. 70. நல்லது, இப்பொழுது வாருங்கள், மற்றும் எல்லோரும் பயபக்தியோடு நில்லுங்கள். இங்குள்ள மக்களுக்கு உதவி செய்வதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் அவர் இங்கிருக்கிறார் என்று உங்கள் முழு உள்ளத்தோடு விசுவாசியுங்கள். மாலை வணக்கம் சகோதரியே, நீங்கள் ஒரு கிறிஸ்தவ ஸ்திரீ என்று நான் உணருகிறேன். உங்களிடத்தில் வரவேற்கும் ஆவியை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எப்பொழுதாவது கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் அதை பார்த்திருக்கிறீர்கள், ஓ, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆம் சீமாட்டியே, நீங்கள் செய்யுங்கள். ஓ, உமக்கு அநேக பிரச்சனைகள் உண்டு. உங்களுக்கு நரம்பு தளர்ச்சியும் உள்ளது. அது வெகு காலமாக இருக்கிறது. மாதவிடாய் நின்ற அந்த சமயத்தில் ஏற்படும் பிரச்சனையினால் தான் நீ தொல்லைக்குட்பட்டாய். அது உண்மையல்லவா? அப்பொழுதிலிருந்துதான் நீங்கள் பலவீனமாக உணர்கிறீர் களல்லவா? இல்லை. இப்பொழுது, இங்கு அது மறுபடியுமாக வருகிறது. ஆமாம், நீங்கள் கீல்வாதத்தினால் பாதிப்படைந்த நபராக இருக்கிறீர்கள். அது உங்களுக்குள்ளதா? அது உண்மை. காலை நேரங்களில் நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அது உங்களுக்கு கடினமாக உள்ளது. அது சரிதானே? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் எதை சொல்கிறாரோ அதை நீங்கள் விசுவாசியுங்கள், "வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்", என்று அவர் சொல்லும் போது அது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? அப்படியானால், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் உங்கள் மூட்டு வலி மற்றும் எல்லா பலவீனங்களும் உங்களை விட்டு போகட்டும். மற்றும் நீங்கள் நலமாயிருங்கள். ஆமென். உங்களுடைய கரங்களை உயர்த்தி வழக்கமாக நீங்கள் எப்படியிருக்கிறீர்களோ அவ்வண்ணமாகவே நீங்கள் இந்த மேடையிலிருந்து நடந்து செல்லுங்கள். இப்பொழுதே முன்னுக்கு செல்லுங்கள்... நல்லது, "கர்த்தருக்கு நன்றி”, என்று நம்முடைய முழு இருதயத்தோடு நாம் சொல்லுவோமாக. 71. நல்லது, சீமாட்டியே வாருங்கள், நீங்கள் வந்த வழியாக நீங்கள் பாருங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் உள்ள தொல்லையை வெளிப்படுத்துவார் என் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் என்னுடைய கரத்தை உங்கள் மேல் வைக்க விரும்புகிறீர்களா? அது அப்படியில்லையா? நீங்கள் திரும்பி செல்லும்போது அந்த முதுகு வலி உங்களை விட்டு சென்றுவிடும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது இந்த மேடையை விட்டு கடந்து செல்லும்போது களிகூர்ந்து கொண்டு சொல்லுங்கள், "நன்றி தேவனே". நல்லது, நாமெல்லோருமாக, "தேவனுக்கு துதி உண்டாவதாக", என்று சொல்லுவோமாக. 72. இப்பொழுது இங்கே உட்கார்ந்திருக்கும் ஒரு சீமாட்டியை நான் பார்க்கட்டும். இந்த மேடையிலிருந்து இங்கிருந்து இந்த தூரத்திலிருந்து நான் பார்க்கமுடியும். இல்லை. இந்த பெண்மணி காது கேளாதவள். இங்கே வாருங்கள். சர்வ வல்லமையுள்ள தேவன், ஜீவனின் ஆக்கியோன், எல்லா நன்மையான ஈவுகளையும் அளிப்பவரே, இந்த ஸ்திரீயின் மேல் உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்புங்கள். உம்முடைய நாமத்தினால் இவர்களை நான் ஆசீர்வதிக்கிறேன். ஓ, நசரேயனாகிய இயேசுவே நீர் அருமையானவராயிருக்கிறீர். சரீரத்தில் வந்த தேவ குமாரனே, நீரே இங்கு இருப்பதினால் இந்த காது கேளாதவர்கள் மீது உங்கள் கரங்களை வையுங்கள், மற்றும் அவர்கள் கேட்கும் திறனை பெற்றுக் கொண்டார்கள். தேவனே, இந்த காது கேளாத இந்த ஸ்திரீ, கேட்க முடியாத நிலையில் இருக்கிறாள். இந்த ஸ்திரீயிடத்தில் சொல்லும் அறிவுரைகளை இவர்கள் கேட்க முடியாது. மற்றும் தன்னுடைய விசுவாசத்தை எப்படியாக பெற்றுக் கொள்ள வேண்டுமோ அதை அறியாதவளாயிருக்கிறாள். எனவே கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனாகிய என்னுடைய ஜெபத்தை நீர் கேளும், வேத வசனத்தில் எழுதியுள்ள வண்ணமாக, மற்றும் இந்த செவிட்டு பிசாசின் மேல், "விசுவாசத்தின் வல்லமையை எனக்குத் தாரும். செவிட்டு ஆவி அவனை விட்டு சென்றபோது, அவனால் கேட்க முடிந்தது”, இப்பொழுது கர்த்தாவே, இந்த பிசாசு இந்த ஸ்திரீயை, ஒரு வாகனத்தின் முன்பாக நடக்க செய்து கொல்லப்பட வேண்டுமென்று அவன் நினைத்தான், ஆனால் அவளுடைய மீட்பராக நீர் இங்கு இருக்கிறீர், கர்த்தாவே, மறுபடியுமாக கேட்கும் திறனை நீர் தந்தருளும். எனவே, கர்த்தாவே எனக்கு உதவி செய்யும். எனவே கர்த்தாவே, இந்த செவிட்டு ஆவிக்கு நான் சவாலிட, விசுவாசத்தின் வழியில் நான் செல்வதற்கு எனக்கு உதவி செய்யுங்கள். ஓ பிசாசே, உன் மேலேயும் மற்றும் உனக்கு உண்டான எல்லாவற்றின் மேலேயும் கல்வாரியின் சிலுவையில் ஜெயம் கொண்ட அவர், மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் பிரதிநிதியாக அவருடைய நாமத்தில் நான் வருகிறேன். தேவ தூதன் மூலமாக எனக்களித்த தெய்வீக சுகமளிக்கும் வரத்தின் ஊழியத்தின் மூலம் நான் உரிமை கோருகிறேன். உன்னுடைய முகத்திரை கிழிக்கப்பட்டது. இனிமேல் இந்த ஸ்திரீயை நீ பிடித்து வைக்கமுடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் உனக்கு கட்டளையிடுகிறேன், இந்த ஸ்திரீயை விட்டு வெளியே வா. என்னுடைய சத்தம் கேட்கிறதா, இப்பொழுது நீங்கள் என்னுடைய சத்தத்தை கேட்கிறீர்களா? நல்லது, எல்லோரையும் போல் உங்களால் கேட்க முடியும். நீங்கள் குணமடைந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளீர்கள். 'கர்த்தருக்கே ஸ்தோத்திரம், இயேசுவை நான் நேசிக்கிறேன்", என்று சொல்லுங்கள் கர்த்தராகிய தேவனுடைய நாமத்தினாலே இந்த அற்புதம் நடந்ததினாலே நீங்கள் ஆம் என்று சொல்லுங்கள் சீமாட்டியே. "தேவனுக்கே துதி உண்டாவதாக”, என்று சொல்லுவோமாக. விசுவாசத்தின் சவாலின் ஊடாக ஊடாக அவருடைய நாமத்தை கொண்டு வரும்போது, எல்லையற்ற தேவ குமாரனுக்கு முன்பாக, எந்த ஒரு பிசாசின் வல்லமையும் நிற்க முடியாது. அது நிற்க முடியாது. மற்றும் தோல்வியடைய முடியாது. சரி நல்லது. 73. சகோதரியே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களை நீங்களே இப்பொழுது அழுத்தத்திற்குள்ளாக முயற்சிக்கிறீர்கள், நீங்கள் முயற்சிக்கிறீர் களல்லவா? ஆம் சீமாட்டியே, அவர் அருகாமையில் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் எதை உணருகிறீர்களோ அந்த அந்தரங்கத்தின் திருப்தி தரும் உணர்வை கர்த்தராகிய தூதன் அதை தருவார் என்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அவருடைய புகைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களா? அதை உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள்... (டேப்பில் காலியிடம்)... சரி நல்லது. இப்பொழுது உங்களுடைய விசுவாசத்திற்கு தேவன் பிரதிபலன் தருகிறார். தேவனுக்கு நன்றி சொல்லி நீங்கள் சென்று, நீங்கள் விரும்பியதை சாப்பிடலாம். உங்களுடைய வயிற்றில், வயிற்று புண் உள்ளது. அதனால் நெஞ்செறிச்சல், நெஞ்சு புண் அதனால் பல காரியங்கள் உங்களை தொல்லைப்படுத்துகிறது. என் சகோதரியே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொண்டு இந்த மேடையை விட்டு நீங்கள் செல்லலாம்... (டேப்பில் காலியிடம்)... 74. இந்த நோயாளியை நீங்கள் கொண்டு வருவதற்கு முன்பாக ஒரு நிமிடம், ஜெப அட்டை இல்லாமல் வெளியில் இருப்பவர்களைக் குறித்தென்ன, நீங்கள் எதை கேட்டீர்களோ அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் எதைப் பார்த்தீர்களோ மற்றும் தேவனுடைய ஆவி உங்களுக்கு என்ன செய்தது என்பதை உணர்ந்தீர்களா? நீங்கள் எதை பார்த்தீர்களோ மற்றும் தேவனுடைய ஆவியை நீங்கள் என்னவாக உணர்கிறீர்களோ அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? மறுபடியும் நீங்கள் திரும்பி சென்றபோது இது உங்களுக்கு ஒரு வகையான கடினமாக இருக்கும். சகோதரன் பாக்ஸ்டர் எப்பொழுது வருவார் என்று நான் அறிவேன். அது என்னவாக இருக்கும் என்று நான் அறிவேன். நான் ஒரு விஷயத்திற்காக மனசாட்சியுள்ளவனாயிருக்கிறேன், அது இப்பொழுது போதுமானது என்று அவர் நினைக்கிறார். அதை நான் உணரவில்லை. நான் வெளியே செல்லும்போது நான் பலவீனமடைந்து மற்றும் நான் நிலைகுலைந்து போகிறேன்.ஆனால் அந்த நேரம் நெருங்கிவிட்டது என்று நான் யூகிக்கிறேன். சரி நல்லது. சகோதரியே, இந்த மேடையை தாண்டி நீங்கள் செல்லும்போது, உங்களுடைய இருதயத்தின் கோளாறு உங்களை விட்டு போய்விடும். அதை நீங்கள விசுவாசித்து செல்லுங்கள். அவள் சுகம் பெற்று அங்கு உட்கார்ந்து இருக்கிறார்கள்.